இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார் | விஜய் மில்டன் படத்தில் ஷாம் | ‛விஜய் 67' பட தலைப்பு லோடிங் : நாளை வருகிறது அறிவிப்பு | இசை படைப்புகளுக்கு சேவை வரியை எதிர்த்த ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷின் மனுக்கள் தள்ளுபடி | 90 சதவீதம் குணமடைந்துவிட்டேன் : விஜய் ஆண்டனி | விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகரின் மகள் | விஜய் படத்திற்காக இளம் நடிகரை சிபாரிசு செய்தாரா மாளவிகா மோகனன் ? | நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள் | ‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? |
தமிழ்த் திரையுலகத்தில் தயாரிப்பாளர்களுக்கென இதுவரை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பாளர்கள் சங்கம் என மூன்று சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
தற்போது நான்காவது சங்கமாக தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற புதிய சங்கம் ஆரம்பமானது. அந்த சங்கத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா இன்று(செப்.,14) முறைப்படி நடைபெற்றது. சங்கத்தின் நிர்வாகிகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த சங்கத்தில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாகத் தெரிகிறது. ஏற்கெனவே இருக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்குப் போட்டியாக இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டதாக அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டினர்.
ஆனால், பழைய சங்கத்தில் எப்போதும் பஞ்சாயத்துகளை செய்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது, தற்போது படமெடுக்கும் தயாரிப்பாளர்களின் சிரமங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்றபடி அந்த சங்கம் செயல்படவில்லை என்ற காரணத்தால்தான் புதிய சங்கம் ஆரம்பிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
புதிய சங்கம் சார்பாக ஏற்கெனவே தியேட்டர்காரர்களுக்கு சில கோரிக்கைகளை வைத்து அந்த சங்கம் மும்முரமாக செயல்பட ஆரம்பித்துவிட்டது. தயாரிப்பாளர்களின் நலனுக்காக அடுத்தடுத்து சங்கம் பல புதிய நடைமுறைகளை செயல்படுத்த இருப்பதாக சங்கத்தினர் தெரிவிக்கிறார்கள்.