Advertisement

சிறப்புச்செய்திகள்

நடிகைகளிடம் அத்துமீறல் எதிரொலி ; தனி ஆளாக புரமோட் செய்த நிவின்பாலி | மும்பை போலீஸ் தெலுங்கு ரீமேக் ; சுதீர்பாபு துணிச்சல் முயற்சி | ஜென்டில்மேன்-2 ஹீரோவாக சேதன் சீனு: தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அறிவிப்பு | நவ.,4ல் ‛லவ் டுடே' வெளியீடு | தீபாவளிக்கு தமிழில் வெளியாகும் ‛ஹர ஹர மகாதேவ்' | தனுஷின் வாத்தி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் | சிரஞ்சீவியின் 'காட் பாதர்': நல்ல விமர்சனம் வந்தும் வசூல் குறைவு | நகுல்,ஸ்ரீ காந்த், நட்டி இணைந்து நடிக்கும் புதிய படம் | வைரலாகும் தனுஷின் கேப்டன் மில்லர் புல்லட் பைக் புகைப்படம்! | பொன்னியின் செல்வனை பாராட்டாவிட்டால் குற்ற உணர்வு ஏற்படும்: திமுக எம்.பி திருச்சி சிவா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நீதிமன்றத்தை அவமதித்து பேசியதாக சூர்யா மீது நடவடிக்கை கோரி நீதிபதி கடிதம்

14 செப், 2020 - 11:01 IST
எழுத்தின் அளவு:
Neet-comment-:-back-fire-to-Suriya

சென்னை : நீட் தேர்வுக் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா, ‛உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது என கூறியிருந்தார். இந்நிலையில் நீதிமன்றத்தை அவமதித்து பேசியதாக சூர்யா மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் நேற்று (செப்.,13) நீட் தேர்வு நடைபெற்றது. தேர்வு அச்சம் காரணமாக தேர்வுக்கு முந்தைய நாளில் தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் எழுந்த பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், நீட் தேர்வு நடந்து முடிந்தது.

இந்நிலையில், நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையில், ‛நம் பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது, இனி பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், ‛கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், நீதிமன்றத்தின் செயல்பாட்டை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா மீது சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டுமென்று கோரி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ‛என்னுடைய கருத்துப்படி, அந்த அறிக்கையானது நீதிபதிகளின் ஒருமைப்பாடு மற்றும் ஈடுபாட்டையும், நமது நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பையும் குறைமதிப்புக்கு உட்படுத்தும் வகையில் மட்டுமின்றி அதை தவறான முறையில் விமர்சித்துள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரலாம். மேலும், இதனால் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
ஆன்லைனில்'ஒரு பக்க கதை!ஆன்லைனில்'ஒரு பக்க கதை! நடப்பு தயாரிப்பாளர் சங்க அலுவலகம் திறப்பு நடப்பு தயாரிப்பாளர் சங்க அலுவலகம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

Dadu - Chennai,இந்தியா
15 செப், 2020 - 13:12 Report Abuse
Dadu இந்த லயலோ கல்லூரியில் படித்த() சூர்யா, N ராம் , விஜய், சகாயம் கூட்டம் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஓவிய கண்காட்சி நடத்தி அதில் ஒரு தரப்பு மக்களின் மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் விதத்திலும் பிரிவினையை ஊக்குவிக்கும் விதத்திலும் பேசி வன்முறையை துண்டுவதை எல்லாம் பார்த்துக்கொண்டு அரசு அமைதியாக இருக்க வேண்டும். அப்படியெனில் இதையெல்லாம் அவர்கள் பக்கத்தில் உள்ள சீனாவில் அல்லது பாகிஸ்தானில் குடியேறி செய்து பார்க்கலாமே?
Rate this:
Rajesh - Chennai,இந்தியா
14 செப், 2020 - 20:07 Report Abuse
Rajesh கருத்து சொல்பவர்கள் எல்லோரும் முதலில் தங்களின் குழந்தைகளை சமசீர் கல்வி திட்டத்தில் நடக்கும் அரசு பள்ளிகளில் தங்களின் பிள்ளைகளை அனுப்பலாமே ஏன் ஏழை குழந்தைகளை குழப்ப வேண்டும்.....
Rate this:
Aasai Thambi - Madurai,இந்தியா
14 செப், 2020 - 14:15 Report Abuse
Aasai Thambi நீதிபதிகள் ஒன்றும் கடவுள்கள் இல்லை பாஸ். பூனைக்கு யார்தான் மணி கட்டுவது. சிவில் கேஸ் என்றால் முப்பது வருஷம், கிரிமினல் கேஸ் என்றால் பத்து வருஷம். நீ கலக்கு சித்தப்பு.
Rate this:
Murthy - Bangalore,இந்தியா
14 செப், 2020 - 13:49 Report Abuse
Murthy நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் - இவர்தான் நவீனகால துரோணாச்சாரியார் (தமிழர்களின் துரோகி). எங்கள் வரியில் வாழ்ந்துகொண்டு எங்களுக்கு துரோகம் செய்யும் துரோகி.
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
14 செப், 2020 - 13:39 Report Abuse
Sridhar பொறுப்பற்ற இவனை போன்ற நடிகர்களை உள்ளே தூக்கிவைத்தால், மற்ற உதவாக்கரை அரசியல்வாதிகளுக்கும் ஒரு பாடமாக அமையும். தமிழகத்தில் அரசியல் அடாவடித்தனம் மிகவும் அதிகமாகவே இருக்கிறது.
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in