Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழில் ரீமேக்காகும் தண்ணீர் மத்தான் தினங்கள்

13 செப், 2020 - 17:40 IST
எழுத்தின் அளவு:
Malayalam-movie-to-be-remade-in-Tamil

கடந்த வருடம் மலையாளத்தில் 'தண்ணீர் மத்தான் தினங்கள்' என்கிற படம் வெளியானது. மிக குறைந்த பட்ஜெட்டில் வெளியான இந்தப்படம் கிட்டத்தட்ட 50 கோடிக்கு பக்கமாக வசூலித்தது ஆச்சர்யப்படுத்தியது. படத்தில் வினீத் சீனிவாசன் மட்டுமே அனைவர்க்கும் தெரிந்த நட்சத்திரம். மற்றபடி இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்த அனஸ்வரா ராஜன் மற்றும் நாயகன் மேத்யூ தாமஸ் ஆகியோர் கிட்டத்தட்ட புதுமுகங்களே.. பள்ளிக்கூட பின்னணியில், ஒரு மாணவி மீதான காதலில் ஆசிரியருக்கும் ஒரு மாணவனுக்குமான ஈகோ யுத்தமாக இந்தப்படம் உருவாகி இருந்தது.

தற்போது இந்தபடம் தமிழில் ரீமேக்காக உள்ளது. அறிமுக இயக்குனர் ஹேம்நாத் என்பவர் இந்தப்படத்தை இயக்க உள்ளார். மலையாளத்தில் கதாநாயகியாக நடித்த அனஸ்வரா ராஜனே தமிழிலும் கதாநாயகியாக நடிக்க உள்ளார். அம்மா கணக்கு படத்தின் மலையாள ரீமேக் ஆக உருவான 'உதாகரணம் சுஜாதா' என்கிற படத்தில் மஞ்சுவாரியரின் மகளாக அறிமுகமானவர் தான் இந்த அனஸ்வரா ராஜன், அதுமட்டுமல்ல, ஏற்கனவே தமிழில் த்ரிஷா நடித்து வரும் ராங்கி என்கிற படத்திலும் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மிகப்பெரிய என்ட்ரியோடு வர்றேன் - வடிவேலுமிகப்பெரிய என்ட்ரியோடு வர்றேன் - ... பா.ஜ.வில் நானா? - விஷால் விளக்கம் பா.ஜ.வில் நானா? - விஷால் விளக்கம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

14 செப், 2020 - 07:14 Report Abuse
தமிழ் கிறுக்கன் அடடே !!! இது பன்னீர் புஷ்பங்கள் கதை ஆச்சே !!!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in