ஒரு வருட நிறைவில் 'விக்ரம்' : தடம் பதித்த தரமான படம் | இசைக் கலைஞர்கள் சங்க கட்டடம் புதுப்பிப்பு : பிறந்தநாளில் இளையராஜா அறிவிப்பு | போர் வீரனாக நடிக்கும் நிகில் | சொகுசு கார் விவகாரம் : ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதம் நிறுத்தி வைப்பு | இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா |
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் மியா ஜார்ஜ். மலையாள படங்களில் நடித்து வந்த அவர் அமர காவியம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை, ஒருநாள் கூத்து, வெற்றிவேல், ரம், யமன் படங்களில் நடித்திருந்தார். தற்போது தமிழில் விக்ரமுடன் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு, கேரளாவைச் சேர்ந்த அஷ்வின் பிலிப் என்கிற தொழிலபதிருடன் மியா ஜார்ஜுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இது பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்ட திருமணம். கொரோனா பிரச்சினையால் சில காலம் தள்ளிப்போன திருமணம் நேற்று எர்ணாகுளத்தில் உள்ள கிறிஸ்துவ தேவலாயத்தில் நடந்தது.
நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருமண நிகழ்ச்சி இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இன்று நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.