பாரிஸ் ஜெயராஜ் டிரைலருக்கு வரவேற்பு | பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு! | காப்பி அடிக்கிறேனோ, தமன் கோபம் | விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு |
நடிகர் விஷால், தமிழக பா.ஜ., தலைவர் முருகனை சந்திக்க அனுமதி கேட்டுள்ளதால் அவர் விரைவில் பா.ஜ.,வில், இணைவார் என்ற எதிர்பார்ப்பு, அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.
நடிகர் விஷால், தமிழக பா.ஜ., தலைவர் முருகனை வரும், 14, 15 ம் தேதிகளில், சந்திக்க அனுமதி கேட்டுள்ளார். விஷால் சந்திப்பு, வரும் சட்டசபை தேர்தலுக்கு முன், கட்சியில் இணைவதற்கான சந்திப்பாக இருக்கலாம் என்ற, தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பாக, பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், நடிகை கங்கனா ரணாவத்திற்கும், மஹாராஷ்டிரா மாநில அரசுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. கங்கனா ரணாவத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால், மத்திய அரசு சார்பில், அவருக்கு, ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகை கங்கனா ரணாவத்திற்கு, நடிகர் விஷால் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: உங்களின் துணிச்சலை பாராட்டுகிறேன். மனதில் பட்ட கருத்துக் களை துணிச்சலாக சொல்கிறீர்கள். உங்களுடைய தனிப்பட்ட பிரச்னைக்காக இல்லாமல், பொதுப் பிரச்னைக்காக, தாங்கள் போராடுவது, 1920ல், பகத்சிங் போராடியது போல் உள்ளது. நல்ல விஷயத்திற்காக, அரசை எதிர்த்து சாமானிய மக்களும் போராடலாம் என்பதை, உங்களின் போராட்ட குணம் எடுத்து காட்டுகிறது. உங்கள் நடவடிக்கைக்கு என் பாராட்டுக்கள்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
கங்கனா ரணாவத்திற்கு, விஷால் ஆதரவு அளித்திருப்பதை தொடர்ந்து, அவர், பா.ஜ., வில் சேர வாய்ப்பு உள்ளது. அதனால் தான், முருகனை சந்திக்க விஷால் அனுமதி கேட்டுள்ளதாக, அவரது ஆதரவு வட்டாரங்கள் கூறுகின்றன.