Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

10வது நினைவு நாள் : பாடி பறந்த குயில் சுவர்ணலதா

12 செப், 2020 - 12:44 IST
எழுத்தின் அளவு:
Singer-Swarnalathas-10th-death-anniversary

சுவர்ணலதா இறந்து இன்றோடு 10 ஆண்டாகிறது. தமிழ் திரையிசை உலகில் இசையாகவே வாழ்ந்து இளம் வயதிலேயே இசையிலேயே கரைந்து போனவர் அவர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் நீதிக்கு தண்டனை என்ற படத்தில் ''சின்னஞ்சிறு கிளியே கண்ணமா...'' என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார். முதல்பாட்டிலேயே கே.ஜே.யேசுதாஸ் உடன் இணைந்து பாடினார். இளையராஜாவின் ஆஸ்தான பாடகிகளான எஸ்.ஜானகி, சித்ராவுக்கு மாற்றாக ஒரு பாடகி தேவைப்பட்டபோது கச்சிதமாகப் பொருந்திப் போனவர் சுவர்ணலதா.

குரு சிஷ்யன் படத்தில் வரும் உத்தமபுத்திரி நானு என்ற பாடல் தான் இளையராஜா இசையில் சுவர்ணலதாவுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு. அதன்பின் அவர் பாடிய பல பாடல்கள் செம ஹிட்டாகின. 'அலைபாயுதே' படத்தில் ஸ்வர்ணலதா பாடிய எவனோ ஒருவன் வாசிக்கிறான் பாடல் இன்றும் எங்கும் ஒலித்து கொண்டே இருக்கிறது. "மாலையில் யாரோ மனதோடு பேச" பாடல் காதலில் விழுந்த ஒவ்வொரு பெண்ணின் தேசிய கீதமாக இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 'கருத்தம்மா' படத்தில் இவர் பாடிய போறாளே பெண்ணுத்தாய் பாடல் தேசிய விருதை பெற்று தந்தது. இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 7000 பாடல்கள் பாடியிருக்கிறார். இளம் வயதிலேயே இசையிலேயே கரைந்து போனாலும் அவர் பாடிய பாடல்கள் இன்றும் பலருக்கு இனிய கீதமாக ரீங்காரமாய் ஒலித்து கொண்டே இருக்கிறது. காலத்தால் அழியாத பாடல்களில் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் சுவர்ணலதா

சுவர்ணலதாவின் முத்தாய்ப்பான சில பாடல்கள்

அடி ராக்கம்மா கைய தட்டு...
மாலையில் யாரோ மனதோடு பேச...
மாசி மாசம் ஆளான பொண்ணு...
ஆட்டமா தேரோட்டமா...
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட...
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல்...
குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே...
மலைக்கோவில் வாசலிலே...
மல்லிகை மொட்டு....
நீ எங்கே....
சொல்லிவிடு வெள்ளி நிலவே...
போறாளே பொண்ணுத்தாய்...
முக்காலா முக்காபுல்லா...
மாயா மச்சிந்திரா...
மெல்லிசையே....
பூங்காற்றிலே...
எவனோ ஒருவன்...

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
37வது நினைவு நாள்: யாராலும் முறியடிக்க முடியாத சாதனை படைத்த ரஞ்சன்37வது நினைவு நாள்: யாராலும் ... ஹாலிவுட் நடிகை டயானா நிக் மரணம் ஹாலிவுட் நடிகை டயானா நிக் மரணம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Joseph Murugan Abdullah - Tirunelveli,இந்தியா
13 செப், 2020 - 17:24 Report Abuse
Joseph Murugan Abdullah Rest In Peace sister
Rate this:
senthil raja a - Varanasi,இந்தியா
13 செப், 2020 - 15:34 Report Abuse
senthil raja a Thanks to தினமலர் for posting this news (along with some a list of her best songs) on the 10th death anniversary of the Humming Queen, Swarnalatha Ma. Indian music has lost a great talent and a humble human being and the vacuum d by her absence will remain forever.
Rate this:
Muthu Kumar - Manama,பஹ்ரைன்
13 செப், 2020 - 14:04 Report Abuse
Muthu Kumar மிகப் பிடித்த பாடகர்களில் இவரும் ஒருவர். இவரின் கணீர் குரல் பாடலை கேட்டாலே ஒரு உற்சாகம் பிறந்து விடும். காதலானாலும், சோகமானாலும் அப்படியே மிக ஒரு இறுக்கமான பற்றுதலோடு அவர் (மலையாளி ஆனாலும்) பாடிய பாட்டுகள் மிக மிக அற்புதம். இன்றும் நான் பாடல் கேட்க ஆரம்பித்தால் இவரின், வள்ளி திரைப் படத்தில் வரும் "என்னுள்ளே என்னுள்ளே" கண்டிப்பாக கேட்காமல் எனது இசைப் பயணம் முடியாது. அதே போல் சின்ன தம்பி பாடல். தங்களின் உடல் மறைந்தாலும், குரல் மறையாது. RIP .
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
13 செப், 2020 - 13:49 Report Abuse
Bhaskaran மாலையில் யாரோ மனதோடு பேச .மறக்க முடியுமா
Rate this:
karutthu - nainital,இந்தியா
13 செப், 2020 - 12:30 Report Abuse
karutthu பாவம் இவங்களையெல்லாம் தமிழ் திரை உலகம் மறந்து விட்டது அதேபோல் நடிகர் ரஞ்சன்.... இவரையும் தமிழ் திரை உலகம் மறந்து விட்டது
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in