Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கங்கனாவை விமர்சிக்கும் பிரகாஷ்ராஜ்

12 செப், 2020 - 11:26 IST
எழுத்தின் அளவு:
Prakashraj-slams-kangana

'மும்பை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உள்ளது' எனப் பேசிய ஹிந்தி நடிகை கங்கனாவுக்கும் மகாராஷ்டிரா அரசுக்கும் இடையே கடும் மோதல் எழுந்துள்ளது. விதி மீறி கட்டிடம் கட்டியதாக கங்கனாவின் அலுவலகத்தை மும்பை கார்ப்பரேஷன் இடித்தது. அதைத் தொடர்ந்து அடிக்கடி டுவிட்டரில் அரசியல் சார்ந்து பல கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் கங்கனா.

கங்கனாவுக்கு எதிர்ப்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது. சில சினிமா பிரபலங்கள் ஆதரவு அளித்தாலும் சிலர் அவருக்கு கேள்விகளை எழுப்புகிறார்கள். நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த சில நாட்களாக கங்கனாவைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

கங்கனாவுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுத்ததைப் பற்றிய புகைப்படத்துடன் கொரானோ காலத்தில் ஏழைகள் பலர் நெடுஞ்சாலைகளில் துயரத்துடன் நடந்த புகைப்படத்தைப் பதிவிட்டு, 'ஆமாம், புதிய இந்தியா' என இரு தினங்களுக்கு முன்பு பதிவிட்டார்.

தற்போது, ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் நடித்ததால் தான் தன்னை அப்படி நினைத்துக் கொண்டு கங்கனா செயல்படுகிறார் என்பதைக் கிண்டலடிக்கும் வகையில், இதற்கு முன் சரித்திரக் கதாபாத்திரங்களில் நடித்தவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களாக நடித்தவர்கள், மோடி கதாபாத்திரங்களில் நடித்தவர்களின் புகைப்படங்களையும் பதிவிட்டு கங்கனாவைக் கிண்டலடித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (24) கருத்தைப் பதிவு செய்ய
சுஷாந்த்தின் மீதான வெறுப்பு தான் ரியாவுக்கு ஆதரவாக வெளிப்படுகிறது : அனுராக் காஷ்யப்சுஷாந்த்தின் மீதான வெறுப்பு தான் ... பரபரப்பை ஏற்படுத்திய சுஷாந்த், ரியா புகைக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய சுஷாந்த், ரியா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (24)

Vijay D Ratnam - Chennai,இந்தியா
24 செப், 2020 - 20:10 Report Abuse
Vijay D Ratnam அது என்னென்னெ தெரியல இந்த அல்லொலியா கும்பலுக்கு மோடி என்ற வார்த்தையை கேட்டாலே ஒடம்பெல்லாம் அரிக்க ஆரம்பித்துவிடுது.
Rate this:
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
15 செப், 2020 - 05:53 Report Abuse
Dr.C.S.Rangarajan முதுகு தெரியாது என்பது உண்மைதான் பிரகாஷ்ராஜ் அவர்களே. உங்கள் முதுகு அழுக்கு உங்களுக்கு தெரியாது என்றாலும் தெரிந்ததை ஒப்புக்கொள்ளும் நாகரீகம் சுற்றுலா சென்றுவிட்டதா
Rate this:
baala - coimbatore,இந்தியா
14 செப், 2020 - 10:38 Report Abuse
baala மனசாட்சியுடன் எழுதலாமே
Rate this:
Raja - chennai,இந்தியா
14 செப், 2020 - 10:11 Report Abuse
Raja இங்கு பதிவிடுபவர்கள் எல்லாரும் என்ன சொல்கிறார் என்பதை விட யார் சொல்கிறார் என்று பார்த்து தான் பதிவிடுகிறார்கள். புலம்பெயர் தொழிலார்கள் நெடுந்தூரம் நடந்து சென்று வழியில் இறந்த சூழ்நிலையில் ஒரு நடிகைக்கு அரசு செலவில் பாதுகாப்பு கொடுப்பது தவறு என்பதை கூறியுள்ளார். இந்த கருத்து சரியா தவறா என்று யாரும் பதிவிடவில்லை. எல்லோரும் பிரகாஷ் ராஜ் என்ற மனிதனை குறை கூறுகின்றனர். இப்படி எதிர் கட்சி அரசை விமர்சிப்பவர்கள் எல்லோருக்கும் அரசு செலவில் பாதுகாப்பு கொடுத்தால் நாடு என்னாகும் என்று யோசிக்க வேண்டும். நாளைக்கு S.V சேகர் அவர்களுக்கு கூட இந்த பாதுகாப்பு கிடைக்கலாம். அப்போதும் இங்கு பிரகாஷ் ராஜை விமர்சித்து பதிவிட்டவர்கள் எல்லாம் அதை ஆமோதிப்பார்கள் போல தெரிகிறது.
Rate this:
Swaminathan Nath - kumbakonam,இந்தியா
14 செப், 2020 - 09:20 Report Abuse
Swaminathan Nath தேசத்திற்கு எதிரான இவன் இப்படி தன பேசுவான், தமிழின துரோகி ,தமிழ் நாட்டில் சம்பாதித்த தமிழ் நாட்டிற்கு ஆதரவாக பேசாதவன்.
Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in