திருவண்ணாமலையில் தேசியக் கொடி ஏற்றிய இளையராஜா | ‛திருச்சிற்றம்பலம்' படத்தை பார்த்த தனுஷ் | லண்டனில் 1540 கிலோமீட்டர் சைக்கிளிங் போட்டியை நிறைவு செய்த ஆர்யா | பிரமாண்டமாக நடைபெறும் வெந்து தணிந்தது காடு இசை வெளியீடு | 'ஜகமே தந்திரம்' பற்றி 'கிரே மேன்' இயக்குனர்கள் கருத்து | ஜெயம் ரவி படத்தை முடித்த நயன்தாரா | சிவாஜி 2வுக்கு வாய்ப்பு இருக்கிறது | புஷ்பா 2வில் விஜய்சேதுபதி இல்லை | ஆமிர்கான் படத்தின் தோல்வி ; ரசிகர்களுக்கு நன்றிசொன்ன விஜயசாந்தி | டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கும் மடோனா |
சின்னத்திரையில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்து, பெருவாரியான மக்களை சிரிக்க வைத்த வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் நேற்று(செப்.,10) காலமானார். அவரின் திடீர் மறைவு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.
சென்னை சேதுப்பட்டுவில் உள்ள பாலாஜி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு நடிகர்கள் விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சவுந்தரராஜா, ரோபோ சங்கர், தாடி பாலாஜி, நாஞ்சில் விஜயன், பழைய ஜோக் தங்கத்துரை, புகழ் உள்ளிட்ட பல சின்னத்திரை கலைஞர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். தனுஷ், கார்த்தி உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்தனர்.
பின் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் புதைக்கப்பட்டபோது அவருடன் சின்னத்திரையில் பங்கேற்ற நாஞ்சில் விஜயன், பழைய ஜோக் தங்கத்துரை, புகழ் உள்ளிட்ட கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.
சிவகார்த்திகேயன் உதவி
நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வந்தவர். அவர் தொகுத்து வழங்கிய அது இது எது நிகழ்ச்சியின் போதே பாலாஜி, இவருக்கு நல்ல பழக்கம். இவரின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன், அவர் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக கூறியுள்ளார். மேலும் அவரின் சிரிப்பு என்றென்றும் நினைவில் இருக்கும் என கூறியுள்ளார்.
வைரலான பாலாஜியின் வீடியோ
பாலாஜி மறைவுக்கு பின் அவர் பேசிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது. அதில், வரும்போதும் எத எடுத்து வந்தோம், போகும்போது எத கொண்டு போக போறோம். பிறப்பு, இறப்பு நடுவுல கொஞ்சம் கேப் இந்த இரண்டும் இடையே சந்தோஷமாக இருப்போம். மற்றவர்களையும் சந்தோஷமாக வைத்திருப்போம். இதுல என்ன நீ பெரியவன், நான் பெரியவன்... என தெரிவித்துள்ளார்.
பலரின் சோகங்களை மறக்க வைத்து சிரிப்பை தந்த பாலாஜி, இன்று பலரையும் குறிப்பாக அவரது குடும்பத்தை கண்ணீரில் தவிக்க விட்டு சென்றுவிட்டார்.