Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குழப்பும் ஓவியா

11 செப், 2020 - 17:18 IST
எழுத்தின் அளவு:
Oviyas-tweet

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவின் ரசிகர் வட்டம் பெரிதானது எல்லோரும் அறிந்ததே. சமூகவலைதளங்களிலும் ஓவியாவை நிறைய ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். அவர் எந்தப் பதிவு போட்டாலும், அது புரிகிறதோ இல்லையோ அதனை வைரலாக்கி விடுகின்றனர்.

அந்தவகையில், ஓவியா தற்போது வெளியிட்டுள்ள டுவீட்டில், “இந்த உலகம் மிகவும் ஒரு ஆபத்தான இடமாக மாறும் என்றால் அது தீயவர்களால் இருக்காது, ஒன்றுமே செய்யாமல் இருப்பவர்களால் தான் இந்த உலகம் ஆபத்தானதாக மாறும்” எனக் குறிப்பிட்டுள்ளார்

அவரது சமீபத்திய டுவீட்டுகளைப் போலவே இந்தப் பதிவும் ஏன் என்று தெரியவில்லை. பிக்பாஸ் வீட்டில் நடிகர் ஆரவ்வை ஒருதலையாகக் காதலித்தார் ஓவியா. நிகழ்ச்சிக்குப் பிறகும் இருவரும் ஒன்றாக சுற்றிய புகைப்படங்கள் வெளியாகின.

ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை ராஹியைத் திருமணம் செய்து கொண்டார் ஆரவ். இந்தத் திருமணத்தில் ஓவியா ஏன் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வியும் எழுந்தது. நிச்சயம் தனது அடுத்த டுவீட்டில் ஓவியா இதற்கு விளக்கமளிப்பார் என எதிர்பார்த்திருந்தனர் ரசிகர்கள். ஆனால் வழக்கம் போலவே சம்பந்தமில்லாமல் தத்துவம் ஒன்றைச் சொல்லி எஸ்கேப் ஆகி விட்டார் ஓவியா.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷ் நாயகியின் கோ-கோ ஆட்டம் துவங்கியதுதனுஷ் நாயகியின் கோ-கோ ஆட்டம் ... கண்ணீர் மல்க விடைபெற்றார் வடிவேல் பாலாஜி - கலைஞர்கள், ரசிகர்கள் அஞ்சலி கண்ணீர் மல்க விடைபெற்றார் வடிவேல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

KavikumarRam - Indian,இந்தியா
12 செப், 2020 - 16:55 Report Abuse
KavikumarRam ஓவியா சரியாகத்தான் சொல்லியிருக்கார். இதில் என்ன குழப்பம் இருக்கிறது? நல்லவர்கள் ஒன்றுமே செய்யாமல் இருப்பது கொட்டுவார்கள் செய்யும் மோசமான செயலை விட கேவலமானது தான்.
Rate this:
ocean - Kadappa,இந்தியா
12 செப், 2020 - 07:12 Report Abuse
ocean தன்னை லவ் பண்ணவர் தன்னை ஒண்ணுமே செய்ய வில்லை என்று உலகை சாக்கிட்டு சாடுகிறார் போலும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in