Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? சேரன் பாண்டியன்

11 செப், 2020 - 14:07 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma---Cheran-pandiyan

படம் : சேரன் பாண்டியன்
வெளியான ஆண்டு : 1991
நடிகர்கள் : சரத்குமார், விஜயகுமார், நாகேஷ், ஆனந்த் பாபு, கவுண்டமணி, செந்தில்
இயக்கம் : கே.எஸ்.ரவிக்குமார்
தயாரிப்பு : சூப்பர் குட் பிலிம்ஸ்

ஒரு படத்தின் வெற்றிக்கு, தெளிவான திரைக்கதை மற்றும் இயக்கம் இருந்தால் போதும், பட்ஜெட் முக்கியமில்லை என்பதை அறிவுறுத்திய படம், சேரன் பாண்டியன். 33 லட்சம் ரூபாய் செலவில், இப்படம் உருவானது. படம், வசூல் மழையை கொட்டியது.

புரியாத புதிர் படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும், இயக்குனர், கே.எஸ்.ரவிக்குமாருக்கு பெரும் அடையாளத்தைக் கொடுத்தது, இப்படம் தான். ஜாதி மீது பற்றுள்ள, கிராமத்தின் தலைவரான விஜயகுமார், அவரது தம்பியான சரத்குமாரை வெறுக்கிறார். விஜயகுமாரின் தந்தை, இரண்டாவது திருமணம் செய்து கொண்ட, தாழ்த்தப்பட்டோர் சமூகத்தைச் சார்ந்த பெண்ணுக்கு பிறந்தவர் சரத்குமார் என்பதால், வெறுக்கிறார்.

இந்நிலையில் சரத்குமாரின் உறவினரான ஆனந்த்பாபு, இந்தக் கிராமத்திற்கு வருகிறார். இவரும், விஜயகுமாரின் மகளான, ஸ்ரீஜாவும் காதலிக்கின்றனர். இவர்களின் காதல் என்ன ஆனது? விஜயகுமார், தன் தம்பியை புரிந்துகொண்டாரா என்பது கிளைமேக்ஸ்.

இயக்குனராக வேண்டும் என, ஆர்.பி.சவுத்ரியிடம் கதை சொல்ல போன சவுந்தர்யன், இப்படத்தில் இசையமைப்பாளர் ஆனார்! கண்கள் ஒன்றாக, காதல் கடிதம், சம்பா நாத்து, வா வா எந்தன், கொடியும், சின்னத் தங்கம், எதிர்வீட்டு, ஊருவிட்டு ஊருவந்து... என, அனைத்து பாடல்களும், பெரும் வரவேற்பைப் பெற்றன.

இப்படத்தின் வெற்றிக்கு பின், கே.எஸ்.ரவிக்குமார் - சரத்குமார் கூட்டணியில், நாட்டாமை, நட்புக்காக, பாட்டாளி, சமுத்திரம் படங்கள் வெளியாகி, பெரும் வெற்றி பெற்றன. சேரன் பாண்டியன் படம், தெலுங்கில், பால ராமகிரிஷ்ணலு; ஹிந்தியில், சவுடெல்லா என, ரீமேக்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - கோபுர வாசலிலேமறக்க முடியுமா? - கோபுர வாசலிலே மறக்க முடியுமா? - தளபதி மறக்க முடியுமா? - தளபதி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in