800 கோடி வசூலைக் கடந்த 'பதான்' | கீதா கோவிந்தம் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேரகொண்டா | மீண்டும் நடிக்கிறார் தங்கர் பச்சான் | பாபி சிம்ஹாவை புறக்கணித்த தமிழ் ஹீரோக்கள் | எனக்கு ஜாதி பிடிக்காது : மேனனை உதறித் தள்ளிய சம்யுக்தா | 92வது வருடத்தில் தெலுங்கு சினிமா | 3வது முறை கிராமி விருது வென்று அசத்திய இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் | போட்டியாக இருந்த சீரியலுக்கே ஹீரோவாக என்ட்ரி கொடுத்த சிபு சூரியன் | ராடானுடன் கைகோர்த்த எஸ்.ஏ.சந்திரசேகர்! விரைவில் சின்னத்திரை என்ட்ரி | கவர்ச்சிக்கு வயது தடை கிடையாது ? : இத்தனை வயதிலும் அசத்தும் ஸ்ரேயா |
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக திரைப்பட பின்னணி இசை கலைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி வறுமையில் வாடுகிறார்கள். அவர்களுக்கு நிதி திரட்டி உதவும் வகையில் யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி வருகிற செப்., 12ம் தேதி பேஸ்புக், யு டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக லைவ் செய்யப்படுகிறது. இதில் 80க்கும் மேற்பட்ட திரைப்பட பின்னணி பாடகர்கள் கலந்து கொண்டு பாடுகிறார்கள். கமல்ஹாசனும், ஏ.ஆர்.ரகுமானும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பாடுகிறார்கள். இந்த நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதி கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த இசை கலைஞர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட இருக்கிறது.