Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜென்டில்மேன் 2 : தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அறிவிப்பு

11 செப், 2020 - 13:46 IST
எழுத்தின் அளவு:
KT-Kunjumon-announced-Gentleman-2

தமிழ் படங்களை கேரளாவில் விநியோகம் செய்து வந்த கே.டி.குஞ்சுமோன் பின்னர் தயாரிப்பாளராக மாறினார். வசந்தகால பறவைகள், சூரியன் படங்களின் வெற்றிகளை தொடர்ந்து, 1993ல் பிரமாண்டமாக அவர் தயாரித்த படம் ஜென்டில்மேன். ஷங்கரை டைரக்டராக அறிமுகப்படுத்திய படம்.

நாயகன் அர்ஜுனுக்கு திருப்புமுனை ஏற்படுத்திய படம். ஏ.ஆர்.ரஹ்மானின் அனைத்து பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பிய படம். அவர் பிரமாண்டமாக தயாரித்து பெரிய தோல்வி அடைந்த ரட்சகன் படத்திற்கு பிறகு படத் தயாரிப்பில் இருந்து ஒதுங்கினார். அதன் பிறகு சில சிறிய பட்ஜெட் படங்களை தயாரித்தார் அவைகள் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்த நிலையில் ஜென்டில்மேன் படத்தின் 2ம் பாகத்தை தயாரிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஜென்டில்மேன் தமிழ் , தெலுங்கு, மொழிகளில் மெகா ஹிட் ஆக்கினார்கள் மக்கள். இந்திய மற்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியிடப்பட்ட இப்படத்தை ரசிகர்கள் கொண்டாட்டமாக வரவேற்றார்கள். ஜென்டில்மேன் படத்தை விட இரண்டு மடங்கு பிரம்மாண்டமாக ஜென்டில்மேல் 2 உருவாக இருக்கிறது.

நவீன தொழில் நுட்பத்தில், ஹாலிவுட் படங்களின் தரத்தில், மெகா பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஜென்டில்மேன் பிலிம் இண்டர்னேஷ்னல் நிறுவனம் சார்பில் இப்படம் தயாரிக்கப்படும். நடிகர், நடிகை மற்றும், தொழில் நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது. என்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
10 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் உஷா உதூப்10 வருடங்களுக்கு பிறகு தமிழில் ... கொரோனா நிதி திரட்ட செப்., 12ல் இசை நிகழ்ச்சி: கமல், ரகுமான் பங்கேற்பு கொரோனா நிதி திரட்ட செப்., 12ல் இசை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Fastrack - Redmond,இந்தியா
13 செப், 2020 - 10:19 Report Abuse
Fastrack மணிக்கு சந்தோஷமா இருக்குமே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in