தலைக்கூத்தல் மூலம் தமிழுக்கு வரும் பெங்காலி நடிகை | வறுமையில் வாடும் இயக்குனர் ‛குடிசை' ஜெயபாரதி | ஹாலிவுட் நடிகை புற்றுநோய்க்கு பலி | தமிழுக்கு ஹீரோவாக வரும் தெலுங்கு காமெடி நடிகர் | விமரிசையாக நடந்த பூர்ணாவின் வளைகாப்பு | படித்த கல்லூரிக்கு விசிட் அடித்த மம்முட்டி | சாஹோ டைரக்டருடன் கைகோர்த்த பவன் கல்யாண் | மோகன்லால் பட வாய்ப்பை ஒதுக்கிய ரிஷப் ஷெட்டி | விருது வழங்கும் விழாவில் மீண்டும் சந்தித்துக்கொண்ட சூபியும் சுஜாதையும் | சத்தம் இல்லாமல் பாலிவுட் படத்தில் நடித்து முடித்த ஜோதிகா |
பிரபல பாலிவுட் பின்னணி பாடகி உஷா உதூப். துள்ளல் பாடல்களுக்கு புகழ்பெற்றவர். மேடையில் சின்னதாக ஆடிக்கொண்டே பாடுவது இவரது ஸ்டைல். அவ்வப்போது திரைப்படங்களில் நடிக்கவும் செய்வார். பாம்பே டூ கோவா, 7 கோன் மாப், பாஸ்ட் இன் பிரசண்ட், ராக் ஆன் 2 உள்பட பல இந்திப் படங்களில் நடித்துள்ளார். 10 வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன் நடித்த மன்மதன் அம்பு படத்தில் நடித்தார்.
அதன்பிறகு தற்போது கமலின் மகள் அக்ஷராஹாசன் நடிக்கும் படத்தில் அவரது பாட்டியாக நடிக்கிறார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் ராஜ ராமமூர்த்தி கூறியதாவது: வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ள ஆளுமையான பாடகி உஷா உதுப் அவர்களுடன் பணிபுரிய கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு மிகப்பெரும் பாக்கியம் ஆகும். மேலும் 10 வருடத்திற்கு பிறகு ஒரு தமிழ் படத்தில் அதுவும் எங்கள் படம் மூலம் அவரை தமிழில் நடிக்க அழைத்து வருவது எங்களுக்கு பெருமையே.
அவர் இப்படத்தில் கர்னாடக சங்கீத வித்தகராக, அக்ஷரா ஹாசனின் பாட்டியாக நடிக்கிறார். படத்தில் அவரது கதாப்பாத்திரம் அவரது இயல்பு வாழ்விற்கு முற்றிலும் நேரெதிரானது. ஆனால் அவர் இக்கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்திப் போவார். மிகப்பிரபல பாடகி என்பதை தாண்டி, அனைவரிடமும் மிக எளிமையாக பழகும் அவரது அன்பான இயல்பு, அவரது துறுதுறுப்பு படக்குழுவில் அனைவரிடமும் பெரும் உற்சாகத்தை கொண்டு வந்திருக்கிறது. அவர் முற்றிலும் இயக்குநரின் நடிகை, அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. என்றார்.