Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : டி.எம்.எஸ்சின் உள்ளம் உருகிய முருகன் பாடல் பிறந்த கதை

11 செப், 2020 - 13:13 IST
எழுத்தின் அளவு:
Flashback--about-TMS-Ullam-Uruguthaya-song

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இசை ஆளுமையான டி.எம்.சவுந்தர்ராஜன் திரைப்பட பின்னணி பாடகர் மட்டுமல்ல ஆயிரக்கணக்கான பக்தி பாடல்களையும் பாடி உள்ளார். குறிப்பாக அவர் பாடிய முருகன் பாடல்கள் இப்போதும் முருகன் கோவில்களில் மந்திரத்திற்கு நிகராக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவற்றில் முக்கியமான பாடல் "உள்ளம் உருகுதய்யா முருகா..." என்ற பாடல். கேட்பவர்களை உருக வைக்கிற பாடல். இந்த பாடல் பிறந் கதை அதை விட உள்ளத்தை உருக வைக்கும்.

ஒவ்வொரு ஆண்டும், கிருத்திகைக்கு டி.எம்.எஸ்., பழநிக்குச் சென்று முருகனை வழிபடுவது வழக்கம். எப்போதும் ஒரே ஹோட்டலில் தான் தங்குவார். அப்படி அவர் அங்கே தங்கிய ஒரு நாளில், அங்கு பணிபுரியும் ஒரு ரூம்பாய் அவனுக்குத் தெரிந்த ராகத்தில், உள்ளம் உருகுதடா' என்று ஒரு பாடலை அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருந்ததைக் கேட்டு, அந்தப் பாடலின் சொல்லிலும் பொருளிலும் மனம் லயித்துப்போனார். இத்தனைக்கும் அந்தச் சிறுவன் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவன்.

அந்தப் பையனிடம் அந்தப் பாடல் குறித்து விசாரித்தார். அதை யார் எழுதியது, எப்படி அது தனக்குத் தெரிய வந்தது என்கிற விவரமெல்லாம் அந்தச் சிறுவனுக்கு தெரியவில்லை. ஏனோ தனக்கு அந்தப் பாடல் ரொம்பப் பிடித்துவிட்டதால், மனதில் பதிந்துவிட்டதாகச் சொன்னான். அந்தப் பாடலை அவனை பாடச்சொல்லி எழுதிக்கொண்டார்.

பின்னர் சென்னைக்கு வந்ததும், முருகனை டா போட்டு ஒருமையில் அழைக்ககூடாது என்று கருதி அந்தப் பாடலில் டா' என்று வருகிற இடத்தையெல்லாம் அய்யா' என மாற்றி, பாடி வெளியிட்டார். பாடல் வெற்றி பெற்றது.

ஆனால் அந்த பாடலை எழுதியவர் யார் என்று தெரியாது. அவருக்கு ராயல்டி கொடுக்க வேண்டுமே என்று அவரை தேடிக் கொண்டிருந்தார். ஒரு நாள் சென்னை தம்புசெட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு சென்றார். அப்போதுதான் அங்குள்ள கல்வெட்டு ஒன்றில் இந்த பாடல் பொறிக்கப்பட்டிருப்பதை கண்டார். அந்த பாடலின் அடியில் இதை எழுதியவர் ஆண்டவன் பிச்சை என்று இருந்தது. ஆண்டவன் பிச்சை யார் என்று தேடினார்.

முருகனின் புகழ்பாடித் திரிந்தவர் மரகதம் என்ற பெண். மக்கள் அவளை பிச்சைக்காரி என்று துரத்தி அடித்தனர். ஒரு நாள் அவளின் பாட்டை காஞ்சி பெரியவர் கேட்டு அவளை அழைத்து ஆசீர்வதித்து "இன்று முதல் நீ ஆண்டவன் பிச்சை என்று நாமம் சூட்டி இறைவனை பாடி வருவாய்" என்று ஆசீர்வதித்தார். அதன் பிறகு ஆண்டவன் பிச்னை என்கிற பெயரில் அவர் கோவில் கோவிலாக பாடித் திரிந்தபோது பாடிய பாடல்களில் ஒன்றுதான் உள்ளும் உருகுதய்யா பாடல்.

இதை கேள்விப்பட்ட டி.எம்.எஸ் அடுத்த கிருத்திகைக்கு பழனிக்கு சென்றபோது ஆண்டவன் பிச்சைக்காக கொடுக்க வைத்திருந்த ராயல்டி தொகையை கோவில் உண்டியலில் செலுத்தினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
5 மொழிகளில் 'க.பெ.ரணசிங்கம்' ஓடிடியில் வெளியீடு5 மொழிகளில் 'க.பெ.ரணசிங்கம்' ... அரசியல் போஸ்டர் ஒட்ட ரஜினி ரசிகர்களுக்கு தடை அரசியல் போஸ்டர் ஒட்ட ரஜினி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in