ரஜினிகாந்துடன் ஆஸ்திரேலியா நாட்டு தூதர் சந்திப்பு | லாவண்யா - வருண் தேஜ் திருமணம் இத்தாலி நாட்டில் ? | என் கண்ணீரை துடைத்தார், என்னை தாங்கி நின்றார் : காதலரின் போட்டோவை பகிர்ந்து இலியானா நெகிழ்ச்சி | 'விடுதலை 2' : மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பம் ? | மீண்டும் தள்ளிப் போகும் வாடிவாசல் | சத்தமில்லாமல் புதிய படத்தில் நடித்து வரும் கவின் | பாலகிருஷ்ணாவின் 109வது படத்தின் அறிவிப்பு வெளியானது | வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு : சின்மயி போன்று தைரியமாக வெளியே சொல்லணும் - பாடகி புவனா சேஷன் | நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி | பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ் |
போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு கன்னட நடிகையர், லாக் - அப்பில், நள்ளிரவில் தகராறில் ஈடுபட்ட தகவல் வெளியாகியுள்ளது. போதைப் பொருள் பயன்படுத்தியது மற்றும் சப்ளை தொடர்பாக பிரபல கன்னட நடிகைகள் ராகினி திவிவேதி, சஞ்சனா கல்ராணி இருவரையும், சி.சி.பி., எனப்படும், மத்திய குற்றப் பிரிவு போலீசார், பெங்களூரில் கைதுசெய்தனர். இவர்கள் சாம்ராஜ்பேட்டையில் உள்ள சி.சி.பி., அலுவலகத்தில் லாக் - அப்பில், ஒரே அறையில் வைக்கப்பட்டுள்ளனர். நள்ளிரவு ஒரு மணியளவில், விளக்கு அணைப்பது தொடர்பாக இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் போட்ட கூச்சலைக் கேட்டு, அங்கு வந்த மகளிர் போலீசாரையும், அவர்கள் மிரட்டிய தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், போதைப் பொருள் கிடைத்தது எப்படி; அது யார், யாருக்கு சப்ளை செய்யப்பட்டது என்பது குறித்து, இருவரிடமும் சி.சி.பி., உயரதிகாரிகள் துருவித் துருவி விசாரித்தனர்.