பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் |
நடிகர் மம்முட்டி கடந்த இரண்டு தினங்களுக்கு முன், தனது 69வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். குறிப்பாக மரக்கன்று முளைத்தது போன்ற வடிவத்துடன் உருவாக்கப்பட்டிருந்த அந்த பிறந்தநாள் கேக் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரல் ஆனது. திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை மம்முட்டிக்கு தெரிவித்தனர்.
இந்தநிலையில் 5 வயதே ஆன பெண் குழந்தை ஒன்று, மம்முட்டியின் பிறந்தநாளை கொண்டாட, அவரது வீட்டிற்கு தன்னை ஏன் அழைத்து செல்லவில்லை என அவரது தந்தையுடன் முரண்டு பிடித்து அழும் ஒரு வீடியோ ஒன்றும் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதுமட்டுமல்ல, அந்த குழந்தை மம்முட்டியின் செல்லப்பெயரான மம்முக்கா என்று சொல்லி அழுவதையும், அந்த குழந்தைக்கு மம்முட்டி பற்றியும் அவரது பிறந்தநாள் பற்றியும் எப்படி மனதில் பதிந்தது என்றும் ரசிகர்கள் தங்களது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.