Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி மரணம்

10 செப், 2020 - 13:55 IST
எழுத்தின் அளவு:
Actor-Vadivel-Balaji-pasess-away

உடல்நலக்குறைவால் காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி(45) மரணம் அடைந்தார். அவரின் திடீர் மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மதுரையை பூர்வீமாக கொண்ட பாலாஜி, மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்டாக தன் வாழ்க்கையை தொடங்கினார். விஜய் டிவி.,யில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். வடிவேலு பாணியில் இவர் செய்த காமெடிகள் பிரபலமானதால் வடிவேல் பாலாஜி என்று அழைக்கப்பட்டார். தொடர்ந்து அந்த டிவியின் நட்சத்திர ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளிலும், மேடை நிகழ்ச்சிகளிலும் நடித்தவர், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.



இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு அதனால் இரு கைகளும் வாதத்தால் முடங்கியது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்பு வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். போதிய பண வசதி இல்லாததால் இறுதியாக இன்று(செப்.,10) சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

யதார்த்தமான பேச்சு மற்றும் நகைச்சுவையால் ரசிகர்களை கொள்ளை கொண்ட பாலாஜி, ரசிகர்களிடம் மட்டுமல்லாது வடிவேலுவிடமே பாராட்டை பெற்றவர். அவரின் திடீர் மறைவு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடப்பு தயாரிப்பாளர் சங்கத்திற்கு விநியோகஸ்தர்கள் சங்கம் ஆதரவுநடப்பு தயாரிப்பாளர் சங்கத்திற்கு ... ஓடிடி ரீலீசுக்கு 100 நாள் போஸ்டரா ? ஓடிடி ரீலீசுக்கு 100 நாள் போஸ்டரா ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in