இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார் | விஜய் மில்டன் படத்தில் ஷாம் | ‛விஜய் 67' பட தலைப்பு லோடிங் : நாளை வருகிறது அறிவிப்பு | இசை படைப்புகளுக்கு சேவை வரியை எதிர்த்த ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷின் மனுக்கள் தள்ளுபடி | 90 சதவீதம் குணமடைந்துவிட்டேன் : விஜய் ஆண்டனி | விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகரின் மகள் | விஜய் படத்திற்காக இளம் நடிகரை சிபாரிசு செய்தாரா மாளவிகா மோகனன் ? | நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள் | ‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? |
பாரதிராஜா தலைமையிலான நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தியேட்டர்களில் புதிய திரைப்படங்களை திரையிட 6 நிபந்தனைகள் விதித்து கடிதம் எழுதியது. இந்த நிபந்தனைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னை, செங்கற்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சில தீர்மானங்களை நிறைவேற்றி வெளியிட்டுள்ளது. அது வருமாறு:
திரையரங்க உரிமையாளர் அவர்கள் சொந்த செலவிலேயே டிஜிட்டல் புரொஜக்டர்களை அமைத்து கொள்ளுதல் அவர்களது கடமை மற்றும் உரிமை. அதை எந்த நிறுவனத்திடம் பெறுகிறார்களோ, அதற்கு உண்டான தொகையை மொத்தமாகவோ, தவணை முறையிலோ அவர்கள் தான் செலுத்த வேண்டும்.
விபிஎப் என்ற பெயரியில் தயாரிப்பாளர்களிடமோ விநியோகஸ்தர்களிடமோ எந்த தொகையும் பெறக்கூடாது மேலும் உலகம் முழுவதும் விபிஎப் கட்டணம் ரத்தாகி இரண்டு ஆண்டுகளாகிறது. ஆனால் நமது நாட்டில் மட்டும் இந்த கொடுமை நீடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
வருங்காலத்தில் தயாரிப்பாளர்களிடமோ விநியோகஸ்தர்களிடமோ திரையரங்க உரிமையாளர்கள் யாரும் விபிஎப் தொகையை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தக்கூடாது தேவைப்பட்டால் படத்தின் ஹார்ட் டிஸ்கை கொடுத்து விடுகின்றோம். அதற்கான செலவு குறைந்தது ரூபாய் 500 முதல் 1000வரை தான் ஆகும்.
இவ்வாறு தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர்.