நெல்சன் தயாரிப்பில் கவின் | விஜய் 68வது படத்தின் பூஜை குறித்து தகவல் இதோ | ஒரே ஆண்டில் இரண்டு ஆயிரம் கோடி படம் தந்த ஷாரூக்கான் | இப்படி ஒரு அண்ணன் இருக்கும் போது எல்லாமே எனக்கு ஜெயம் தான் : ஜெயம் ரவி | தமிழுக்கு வரும் அடுத்த மலையாள நடிகை நிமிஷா சஜயன் | அஜித்துடன் நடிக்கிறாரா தீபக்? - வைரலாகும் புகைப்படங்கள் | கிழக்கு வாசல் சீரியல் நேரம் மாற்றம் | டபுள் ஐ ஸ்மார்ட் ஷங்கர் படத்தில் டபுள் ஹீரோயின் | இசையில் இணையும் தந்தை, மகள் | சமூக நீதியும், சமூக பார்வையும் கொண்ட படமே ‛தீ இவன்' |
நாகேஷ் குகுனூர் இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், கீர்த்தி சுரேஷ், ஆதி, ஜெகபதி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம். இப்படத்தின் படப்பிடிப்பு கொரானோ ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
கடந்த வாரம் மீண்டும் ஐதராபாத்தில் படப்பிடிப்பு ஆரம்பமானது. படத்தில் நாயகனாக நடிக்கும் ஆதி அவருடைய படப்பிடிப்பை கடந்த வாரம் முடித்தார். தற்போது படத்தின் நாயகி கீர்த்தியும் அவருடைய படப்பிடிப்பை முடித்துவிட்டார்.
இப்படத்தை தெலுங்கில் தயாரித்தாலும், தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். படத்தின் டீசரை கடந்த மாதம் வெளியிட்டார்கள். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிகிறது.