Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2020 தீபாவளிக்கு 'மாஸ்டர்' ரிலீஸ்?

09 செப், 2020 - 19:53 IST
எழுத்தின் அளவு:
Master-may-release-on-Diwali

கொரோனா ஊரடங்கு தியேட்டருக்குச் சென்று சினிமா பார்க்கும் பழக்கத்தையே நமக்கு மறக்க வைத்துவிட்டது. கடந்த மார்ச் மாதம் மத்தியில் தியேட்டர்கள் மூடப்பட்டன. இன்னும் ஒரு வாரம் போனால் தியேட்டர்களை மூடி ஆறு மாத காலம் ஆகிவிடும்.

மத்திய அரசு, மாநில அரசுகள் ஆகியவற்றுடன் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் ஆலோசித்து வரும் நிலையில் அக்டோபர் மாதம் தியேட்டர்கள் திறக்கப்படலாம் எனத் தெரிகிறது. அப்படி அக்டோபர் மாதம் தியேட்டர்கள் திறக்கப்பட்டால் உடனடியாக வெளிவருவதற்கு பெரிய படங்கள் எதுவுமில்லை.

விஜய் நடித்த 'மாஸ்டர்', சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' ஆகிய இரண்டு படங்கள் மட்டும்தான் பெரிய படங்களாக இருந்தன. இதில் 'சூரரைப் போற்று' படம் அக்டோபர் 30ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. எனவே 'மாஸ்டர்' படம் மட்டுமே இப்போதைக்கு உள்ளது.

அக்டோபர் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட்டால் உடனடியாக மக்கள் வர வாய்ப்பில்லை. அதற்கு ஓரிரு வாரங்கள் ஆகலாம். அதற்குள் இந்த வருடத்தின் தீபாவளி நாளான நவம்பர் 14ம் தேதி வந்துவிடும். எனவே, அப்போது 'மாஸ்டர்' படத்தை வெளியிட்டால் மிகச் சரியாக இருக்கும்.

அப்படத்திற்குப் போட்டியாக வேறு படம் இல்லாத காரணத்தால் 'மாஸ்டர்' படம் அதிக தியேட்டர்களில் வெளியாக வாய்ப்புள்ளது. அதைத்தான் வினியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் விரும்புவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எல்லாம் இப்படியே நடந்தால் 'மாஸ்டர்' படம் 'பிளாக் பஸ்டர்' ஆக வாய்ப்புண்டு.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கமல் படம் : முருகதாஸ் பயம்கமல் படம் : முருகதாஸ் பயம் வித்யுலேகா வைத்த 'சஸ்பென்ஸ்!' வித்யுலேகா வைத்த 'சஸ்பென்ஸ்!'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in