விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
தமிழக அரசின் திரைப்பட விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டது. இடையில் பல ஆண்டுகள் வழங்கப்படாமல் இருந்தது. பின்னர் 2009 முதல் 2014 ஆண்டு வரை வந்த படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் விழா நடத்தப்படவில்லை. இதற்கு பிந்தைய ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கும்படியும் அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
ஆனால் கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் இந்த அறிவிப்பு பலருக்கு சென்று சேரவில்லை. அதனால் பலரும் விண்ணப்பிக்கவில்லை. இதனால் விண்ணப்பிக்கும் கால அளவை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், இயக்குனர் ரவிமரியா ஆகியோர் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து திரைப்பட விருதுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை நீட்டிக் கோரி மனு அளித்தனர். அதனை அமைச்சரும் ஏற்றுக் கொண்டார்.