இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார் | விஜய் மில்டன் படத்தில் ஷாம் | ‛விஜய் 67' பட தலைப்பு லோடிங் : நாளை வருகிறது அறிவிப்பு | இசை படைப்புகளுக்கு சேவை வரியை எதிர்த்த ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷின் மனுக்கள் தள்ளுபடி | 90 சதவீதம் குணமடைந்துவிட்டேன் : விஜய் ஆண்டனி | விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகரின் மகள் | விஜய் படத்திற்காக இளம் நடிகரை சிபாரிசு செய்தாரா மாளவிகா மோகனன் ? | நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள் | ‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? |
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பிருந்தே தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டது. கடந்த 5 மாதத்திற்கும் மேலாக தியேட்டர்கள் மூடிக் கிடக்கின்றன. வருகிற அக்டோபர் 1ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தியேட்டர்களில் புதிய படங்களை திரையிட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய நிபந்தனை விதித்துள்ளது.
தற்போது படம் எடுத்துக் கொண்டிருக்கும் 50 தயாரிப்பாளர்கள் கையெழுத்திட்டு தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகிகளுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளனர். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
தயாரிப்பாளர்களாகிய நாங்கள் சிறிய தொகை முதல் 60 அல்லது 70 கோடி வரை ஷேர் வரும் படங்களை தயாரித்து வெளியிட்டு வந்துள்ளோம். இனிவரும் காலங்களில் இதுபோல் ஷேர் வருமா என்பது இயலாத காரியம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எங்களது படங்களை திரையரங்குகளில் திரையிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே சில முடிவுகள் எடுக்க வேண்டுகிறோம். தற்போது படம் எடுத்து வரும் தயாரிப்பாளர்கள் இணைந்து சில முடிவுகளை எடுத்துள்ளோம்.
தயாரிப்பாளர்களாகிய நாங்கள் தான் 10 ஆண்டுகளாக கியூப், விபிஎப் கட்டணத்தை செலுத்தி வந்தோம். இனிமேல் இந்த கட்டணத்தை எங்களால் செலுத்த முடியாது. திரையரங்கு ஷேர் விகிதங்கள் மிகவும் குறைவு என்பதால் தியேட்டர்களை திறக்கும் முன்பு இவற்றை மாற்றி அமைக்க வேண்டும். திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருவாயில் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்க வேண்டும்.
ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மூலம் வரும் தொகையில் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பகுதி தர வேண்டும். ஓடிக்கொண்டிருக்கும் படங்களை திடீரென்று நிறுத்துவதையும் தரமான படங்களை பிக்கப் ஆவதற்கு வாய்ப்பளிக்காமல் மறுப்பதையும் தவிர்க்க வேண்டும். கன்பர்மேஷன் என்ற பெயரில் எடுத்து நடத்தும் முறைகளையும் தவிர்க்க வேண்டும்.
திரையுலகின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தியேட்டர் அதிபர்கள் இதுகுறித்து நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.