சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் | 'யாக்கை திரி'க்காக கொல்கத்தா வந்துசேர்ந்த பரத் | வாரணாசி ஸ்வீட் கடைக்காரருக்கு அஜீத் கொடுத்த இன்ப அதிர்ச்சி | எம்ஜிஆருக்கு சிறப்பு செய்த தலைவி படக்குழுவினர் |
2020ம் ஆண்டு மார்ச் மாதம் முடிய தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் குறைவான படங்கள்தான் வெளிவந்தன. அவற்றிலும் மிகக் குறைவான படங்களே வெற்றி பெற்றன.
தெலுங்கில் பிப்ரவரி மாதத்தில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'பீஷ்மா'. மார்ச் மாதக் கடைசியில் தியேட்டர்கள் மூடப்படவில்லை என்றால் இன்னும் கூட இந்தப் படம் ஓடியிருக்கும். அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பு வரை தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்த நிதினுக்கு, 'பீஷ்மா' திருப்புமுனையான வெற்றியைத் தந்தது. அதன் காரணமாக படத்தை இயக்கிய வெங்கி குடுமுலாவுக்கு கார் ஒன்றை அவரது பிறந்தநாள் பரிசாக அளித்துள்ளார்.
காரைப் பரிசாக வாங்கிய வெங்கி, “சிறந்த மனிதருடன் சிறந்த படத்தை உருவாக்கும் போது சிறப்பானதே நடக்கும். பிறந்தநாள் பரிசாக சிறந்த பரிசை அளித்த நிதின் அண்ணாவுக்கு நன்றி,” எனத் தெரிவித்துள்ளார்.