Advertisement

சிறப்புச்செய்திகள்

நயன்தாராவின் புதிய படத்தை இயக்கப்போவது இவரா? | ஒன்றாக எதிர்த்து போராடுவோம் - ரகுல் பிரீத் சிங் | சரியான நேரத்தில் உதவி செய்து 30 உயிர்களை காப்பாற்றிய சோனு சூட் | இரண்டாவது அலையை தியேட்டர்கள் சமாளிக்குமா ? | சிவகார்த்திகேயன் படங்களின் நடித்த காமெடி நடிகர் பவுன்ராஜ் மரணம் | கொரோனாவை சமாளிக்க ஆண்ட்ரியாவின் 10 ஆலோசனைகள் | 40 வருட தெலுங்குப் பயணத்தை நினைவு கூர்ந்த ராதிகா | கொரோனா மருத்துவமனைக்கு நிதி சேர்க்கும் 'வலிமை' நாயகி | பெப்சி தொழிலாளர்களுக்கு உதவ அஜித் ரூ.10 லட்சம் நிதியுதவி | ஊரடங்கில் நடக்கும் படப்பிடிப்புகளை தடுத்து நிறுத்துங்கள்: முதல்வருக்கு சாந்தினி கோரிக்கை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கங்கணம் கட்டும் கங்கனா : மல்லுக்கட்டும் சிவசேனா : அலுவலகம் இடிப்பு - மும்பையில் பரபரப்பு

09 செப், 2020 - 14:13 IST
எழுத்தின் அளவு:
Face-to-Face-:-Kangana---Shivsena-clash

மும்பை: ‛செப்.,9ல் மும்பை வருகிறேன், முடிந்தால் தடுத்து நிறுத்துங்கள், என சிவசேனா கட்சிக்கு சவால் விடுத்த நடிகை கங்கனா ரனாவத் குறித்து இன்று (செப்.,9) நெட்டிசன்கள் டுவிட்டரில் கங்கனாவை வரவேற்கும் விதமாக டிரண்டாக்கி வருகின்றனர். அதேசமயம் அவரின் அலுவலகம் விதிமீறி கட்டப்பட்டதாக கூறி மும்பை மாநகராட்சி இடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சமூகவலைதளங்களில் கங்கனா, மகாராஷ்டிரா ஆளும் சிவசேனா அரசு இடையேயான மோதலும், அது தொடர்பான ஹேஷ்டாக்களும் டுவிட்டரில் டிரெண்ட்டிங்கில் உள்ளன.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மர்ம மரணம் தொடர்பாக நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. போதைப் பொருள் கடத்தல் கும்பல் மற்றும் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் காரணமாக சுஷாந்த் சிங் இறந்ததாகவும், மும்பை, பாதுகாப்பற்ற நகரமாக மாறி விட்டதாகவும், கங்கனா கூறியிருந்தார். மஹாராஷ்டிரா ஆட்சியாளர்களும், மும்பை போலீசாரும் இந்த கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவர் கூறியிருந்தார்.இதையடுத்து, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்., உள்ளிட்ட அரசியல் கட்சியினர், கங்கனாவுக்கு மிரட்டல் விடுத்தனர். அவரை, மும்பைக்குள் நுழையக்கூடாது என அதிரடியாக கூறினர். செப்., 9ம் தேதி மும்பைக்கு வரும் என்னை, முடிந்தால் தடுத்து நிறுத்துங்கள் என, கங்கனா பதிலடி கொடுத்திருந்தார். இதற்கிடையில் நடிகை கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஒய் பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது.

அவர் சவால் விடுத்த நாளும் இன்று (செப்.,9) வந்துவிட்டது. இதனால் சிவசேனா கட்சியினருக்கு விடுத்த சவால்படி, இன்று மும்பை வந்துவிடுவார் என்றே நெட்டிசன்களும் ஆர்வமாய் காத்திருக்கின்றனர். மேலும் டுவிட்டரில் கங்கனா, மும்பையை காண தயாராகிவிட்டேன். மகாராஷ்டிரா அரசும், அவர்களது குண்டர்களும் எனது சொத்துக்களையும், உடைமைகளையும் சேதப்படுத்த தயாராக உள்ளனர். செல்லுங்கள், மகாராஷ்டிராவிற்காக என் ரத்தத்தையும் கொடுப்பேன் என உறுதி அளித்துள்ளேன். அப்படி நேர்ந்தால் பெருமையே என தெரிவித்தார்.இதனால் டுவிட்டரில் காலை முதல், KanganaRanaut, KanganaWelcomeToMumbai மற்றும் Welcome to Mumbai போன்ற ஹேஸ்டேக்குகளுடன் கங்கனாவை வரவேற்கும் நெட்டிசன்கள், டிரண்டிங்கில் தெறிக்கவிடுகின்றனர். மேலும் ஒய் பிளஸ் பாதுகாப்பு உடன் கங்கனா விமான நிலையத்தில் வந்த போட்டோக்களும் வைரலாகின.

அலுவலகம் இடிப்பு
இதற்கிடையே கங்கனாவின் அலுவலகம் விதிகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாக கூறி மும்பை மாநகராட்சி நேற்று நோட்டீஸ் ஒட்டிய நிலையில் இன்று(செப்., 9) திடீரென அவற்றை இடித்தது. இதனால் அங்கு பரபரப்பு சூழல் நிலவுகிறது.
இதுப்பற்றி கங்கனா டுவிட்டரில், நான் எந்த தவறும் செய்யவில்லை. எனது எதிரிகள் மீண்டும் மீண்டும் மும்பை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள காஷ்மீர் என்பதை நிரூபிக்கிறார்கள். என் வீட்டில் சட்டவிரோதமாக எந்த கட்டடமும் கட்டப்படவில்லை. மேலும் கோவிட் 19 காரணமாக செப்., 30வரை எந்த கட்டடங்களையும் இடிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதான் பாசிசம் என தெரிவித்துள்ளார்.

வழக்கு
இதற்கிடையே மும்பை மாநகராட்சியின் நடவடிக்கையை எதிர்த்து கங்கனா சார்பில் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யட்டது. இந்த வழக்கு அவசர வழக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டு விசாரணை நடக்கிறது. கங்கனாவின் அலுவலகத்தை இடிக்கும் பணியை நிறுத்தும்படி மும்பை மாநகராட்சிக்கு கோர்ட் அறிவுறுத்தி உள்ளது. மேற்கொண்ட விசாரணை 3மணிக்கு துவங்குகிறது.
கங்கனா ரணாவத், சிவசேனா அரசு இடையேயான மோதல் காரணமாக இன்று சமூகவலைதளங்களில் கங்கனா தொடர்பான செய்தி தான் டிரெண்ட்டிங்கில் உள்ளது. #KanganaRanaut, ShameOnMahaGovt, KanganaWelcomeToMumbai, UddhavThackeray, Welcome to Mumbai போன்ற ஹேஷ்டாக்குகள் இன்றைய டுவிட்டர் டிரண்டிங்கில் முதல் 10 இடங்களை பிடித்தன. .

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
ஹிந்தி எதிர்ப்பு : நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ்ஹிந்தி எதிர்ப்பு : நெட்டிசன்களிடம் ... இயக்குனருக்கு கார் பரிசளித்த நிதின் இயக்குனருக்கு கார் பரிசளித்த நிதின்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

meenakshisundaram - bangalore,இந்தியா
14 செப், 2020 - 05:16 Report Abuse
meenakshisundaram அது சரி -இந்த லோன வாளா 'எஸ்டேட் யாருக்கு சொந்தம்?பவாருக்கு தானே ?கொஞ்சம் சொல்லுங்க சேனா
Rate this:
Aanandh - thamizhnaadu,இந்தியா
11 செப், 2020 - 05:28 Report Abuse
Aanandh இவள் விமர்சனம் எரிச்சலூட்டிய காரணத்தினால், கட்டப்பெற்ற கட்டிடம் திடீரென்று விதி மீறலாகி விட்டதா......ஆண்டுகள் கடந் தா அனுமதியை தேடுகிறது அரசியல் காழ்ப்புணர்ச்சி?
Rate this:
Ravi Chandran - Vienna,ஆஸ்திரியா
10 செப், 2020 - 14:10 Report Abuse
Ravi Chandran இந்தியாவில் மொத்தமாக நடப்பது ஜனநாயக சர்வாதிகாரம், யார் ஆட்சிக்கு வந்தாலும் உடனேயே சர்வாதிகாரியாகி விடுகிறார்கள். அவர்களுக்கு எதிரானவர்களை உடனே தீர்த்துக்கட்டிட முயற்சிப்பார்கள். விஜயகாந்த் திருமணமண்டபம் இடிப்பும் ஒரு உதாரணம் . என்று தான் திருந்துவார்களோ இவர்கள். நான் சொல்வது எல்லா அரசியல் சாக்கடைவாதிகளையும் சேர்த்து.
Rate this:
ponssasi - chennai,இந்தியா
10 செப், 2020 - 13:06 Report Abuse
ponssasi மும்பையில் அவர் வீடு, அலுவலகம் மட்டும்தான் விதி மீறி கட்டப்பட்டுள்ளதா? இந்த அரசியல்வாதிகள் அறிவு இவ்வளவுதானா? அவர் வீடு இடிக்கப்பட்டதால் நஷ்டம் சில லட்சம் தான். தேசிய அளவில் உங்கள் மதிப்பு மிக கேவலம். தி மு கா இப்படி சில சம்பவங்களில் ஈடுபட்டு மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாமல் வன்முறை கட்சி என்ற பெயரோடு நிற்கிறது.
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
10 செப், 2020 - 09:38 Report Abuse
M.Sam போங்கடா நீங்களும் உங்க அரசியிலும்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in