Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹிந்தி எதிர்ப்பு : நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ்

09 செப், 2020 - 12:11 IST
எழுத்தின் அளவு:
Hindi-issue-:-Aishwarya-rajesh-trolled-by-fans

கடந்த இரண்டு நாட்களாக ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் 'ஐ ஆம் ஏ தமிழ்பேசும் இந்தியன்' என்கிற வார்த்தைகளை கொண்ட வெள்ளை நிற டி-ஷர்ட்டையும், 'இந்தி தெரியாது போடா' என்கிற வாக்கியம் இடம்பெற்ற சிவப்பு நிற டி-ஷர்சட்டையும் திரையுலக பிரபலங்கள் பலரும் அணிந்துகொண்டு, அவற்றை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு தங்களது இந்தி எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்படி எதிர்ப்பைத் தெரிவித்த பிரபலங்களில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர்.

அதேசமயம் ஐஸ்வர்யா ராஜேஷை பொறுத்தவரை கடந்த 2017-ல் ஹிந்தியில் முதன்முதலாக 'டாடி' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதுமட்டுமல்ல மும்பையில் நடைபெற்ற அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, ஹிந்தியிலும் பேசி தனக்கும் ஹிந்தி தெரியும் என்று அவர் கூறிய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை வெளியிட்டு, “நீங்கள் பிழைப்பதற்கு மட்டும் ஹிந்தி வேண்டும்.. ஆனால் மற்றவர்கள் படிப்பதற்கு ஹிந்தி கூடாதா..? நீங்கள் செய்வது பொருத்தமற்ற ஒன்று” எனக்கூறி அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.


Advertisement
கருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய
அண்ணி என கூறிய பவன் கல்யாண் ரசிகருக்கு நடிகை பதிலடிஅண்ணி என கூறிய பவன் கல்யாண் ... கங்கணம் கட்டும் கங்கனா : மல்லுக்கட்டும் சிவசேனா : அலுவலகம் இடிப்பு - மும்பையில் பரபரப்பு கங்கணம் கட்டும் கங்கனா : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (16)

kamaraj jawahar - CA,யூ.எஸ்.ஏ
11 செப், 2020 - 09:04 Report Abuse
kamaraj jawahar இந்த சங்கிகள் எல்லாம் ஹிந்தி எதிர்ப்பை கண்டு அரண்டு போய இருப்பது மனதுக்கு இதமாக இருக்கிறது. ஐஸ்வர்யா உங்கள் தமிழ் பற்றுக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Siva Kumar - chennai,இந்தியா
11 செப், 2020 - 05:32 Report Abuse
Siva Kumar காசுக்காக ஆட்டம் போட்டால் கண்ட பேச்சுக்கும் ஆளாகத்தான் வேண்டும். ஆனால் நம் தமிழ் நடிகர் நடிகைகள் வெட்கம், சூடு சொரணை இல்லாதவர்கள்.
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
10 செப், 2020 - 20:11 Report Abuse
madhavan rajan தமிழை தமிழில் வெளிக்காட்டத் தெரியாத இவர்களது அந்நிய நாட்டு மொழி மோகம் வெளிப்படுகிறது. அதைத்தான் தமிழக அரசியல் கழகத் தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
10 செப், 2020 - 20:10 Report Abuse
madhavan rajan அந்த வாசகர்களுக்கு கீழே தமிழும் தெரியாது என்று போட்டிருக்கவேண்டும்.
Rate this:
Jay - Bhavani,இந்தியா
10 செப், 2020 - 18:22 Report Abuse
Jay வடிவேலுவை அழிச்சிட்டு இன்னைக்கு வேறு ஆள் தேடறாங்க
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in