Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

படப்பிடிப்பில் 100 பேருக்கு அனுமதி: முதல்வருக்கு பெப்சி கோரிக்கை

08 செப், 2020 - 17:04 IST
எழுத்தின் அளவு:
FEFSI-demands-to-allow-100-people-in-shooting

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 19ந் தேதி முதல் திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. கடந்த 5 மாதங்களுக்கு மேல் படப்பிடிப்பு எதுவும் நடக்காததால் பெப்சி தொழிலாளர்கள் வாழ்க்கை மிகவும் சிக்கலாகி இருக்கிறது. நடிகர், நடிகைகள் மற்றும் அரசு வழங்கிய நிவாரண நிதியை கொண்டு சமாளித்து வருகிறார்கள்.

தற்போது ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு வருகிறது. அதில் திரைப்பட படப்பிடிப்புக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் படப்பிடிப்பல் அதிகபட்சம் 75 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்கிற நிபந்தனையால் ஒரு சில சிறு பட்ஜெட் படங்கள் தவிர வேறு எந்த படத்தின் படப்பிடிப்பும் நடக்கவில்லை. குறைந்தது 100 பேராவது பணியாற்றினால் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடியும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது 100 பேர் பணியாற்ற அனுமதிக்க வேண்டுகோள் விடுத்தனர். சந்திப்புக்கு பிறகு ஆர்.கே.செல்வமணி நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தமைக்கும், 3 முறை பெப்சி தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதி கொடுத்தமைக்கும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம். அரசு திடீரென படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதால் தயாரிப்பாளர்கள் யாரும் படப்பிடிப்புக்கு முன் தயாரிப்பு செய்து வைத்திருக்கவில்லை. அதனால் ஒரு சில படங்களே பணிகளை தொடங்கி உள்ளது. 60 படங்கள் வரை மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறது. ஆனால் 75 பேரை வைத்துக் கொண்டு படப்பிடிப்பு நடத்துவது சிரமாமான காரியம். அதனை 100 பேராக உயர்த்த வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். அவரும் அதுகுறித்து ஆலோசித்து முடிவெடுப்பதாக கூறியிருக்கிறார். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எஸ்.பி.பி., சிகிச்சை பற்றி பரவும் தவறான தகவல்எஸ்.பி.பி., சிகிச்சை பற்றி பரவும் ... அக்டோபர் முதல் தியேட்டர்கள் திறப்பு? அக்டோபர் முதல் தியேட்டர்கள் திறப்பு?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in