Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித்துக்கு முதல் திருப்புமுனை தந்த 'ஆசை' - டிரண்ட்டிங் ஸ்டோரி

08 செப், 2020 - 12:14 IST
எழுத்தின் அளவு:
Ajiths-first-break-up-movie-Aasai

மணிரத்னம், ஸ்ரீராம் தயாரிப்பில், வசந்த் இயக்கத்தில், தேவா இசையமைப்பில், அஜித், சுவலட்சுமி, பிரகாஷ்ராஜ், ரோணிகி மற்றும் பலர் நடித்து செப்டம்பர் 8, 1995ம் ஆண்டு வெளிவந்த படம் 'ஆசை'.

அஜித்துக்கு முதன் முதலில் திருப்புமுனையைத் தந்த முதல் வெற்றிப் படம் இது. இப்படத்திற்கு முன்னதாக அஜித் அறிமுகமான 'அமராவதி, பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே' ஆகிய படங்கள் வெளிவந்தன. அந்த நான்கு படங்களும் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை.

'ஆசை' படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் தேவாவின் இசையில் வந்த பாடல்கள். அதற்கு முன் வரை பி அண்ட் சி இசையமைப்பாளராகவே பார்க்கப்பட்ட தேவாவை ஒரு 'எலைட்' இசையமைப்பாளராகப் பார்க்க வைத்த படம் இது.

'கொஞ்ச நாள் பொறு தலைவா..., மீனம்மா...., புல்வெளி.. புல்வெளி..,' ஆகிய பாடல்கள் அந்தக் காலத்தில் கேசட்டில் திரும்பத் திரும்பப் போட்டு தேய்த்தவர்கள்தான் அதிகம்.

மிகவும் இளமையான அஜித், அழகான சுவலட்சுமி, மிரட்டலான வில்லன் பிரகாஷ் ராஜ், அப்பாவி அக்கா ரோகிணி, அஜித்தின் நண்பராக வடிவேலு என படத்தில் நடித்த ஒவ்வொருவருமே அவரவர் கதாபாத்திரங்களில் ஜொலித்தனர்.

இயக்குனர் வசந்த் கொடுத்த இந்த வெற்றி தான் அஜித்தை அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க வைக்கக் காரணமாக இருந்தது. அதன்பின் மணிரத்னம் தயாரிப்பிலும், வசந்த் இயக்கத்திலும் ஒரு படத்தில் கூட அஜித் நடிக்கவில்லை என்பது கூடுதல் தகவல். இன்றுடன் 'ஆசை' படம் வெளிவந்து 25 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதை ரசிகர்கள் சமூகவலைதளத்தில் டிரெண்ட் செய்தனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஏ.ஆர்.ரஹ்மானைக் கவர்ந்த 'சில்லுனு ஒரு காதல்'ஏ.ஆர்.ரஹ்மானைக் கவர்ந்த 'சில்லுனு ... 'க.பெ. ரணசிங்கம்' - ஓடிடி-யில் பணம் கொடுத்து பார்க்கும் முறையில் ரிலீஸ் 'க.பெ. ரணசிங்கம்' - ஓடிடி-யில் பணம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Raja -  ( Posted via: Dinamalar Android App )
08 செப், 2020 - 15:35 Report Abuse
Raja Thala Ajith is always ultimate..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in