பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் |
சமூக வலைத்தளங்கள் பிரபலமான பின் இதற்கு முன் வெளிவந்த படங்களின் ஆண்டுக் கொண்டாட்டங்களை அந்தப் படங்களின் ரசிகர்கள், அதில் நடித்தவர்களின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அந்த விதத்தில் கிருஷ்ணா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சூர்யா, ஜோதிகா, பூமிகா மற்றும் பலர் நடித்து 2006ம் ஆண்டு வெளிவந்த 'சில்லுனு ஒரு காதல்' படத்தை சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அவர்கள் இதைக் கொண்டாடுவதில் ஆச்சரியமில்லை. ஆனாலும், படத்திற்கு இசையமைத்த ஏஆர் ரஹ்மானும் 14ம் வருடக் கொண்டாட்டத்திற்கான டுவீட்டைப் பகிர்ந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. இத்தனைக்கும் இந்தப் படம் வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால், படத்தில் இடம் பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன.
குறிப்பாக, 'முன்பே வா' பாடல் இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. ஒருவேளை தன் மனம் கவர்ந்த பாடல்கள் இந்தப் படத்தில் இருக்கிறது என்பதற்காக ரகுமான் இன்று டுவிட்டரில் பதிவிட்டிருக்கலாம்.
ரகுமான் டுவீட்டைப் பார்த்த இயக்குனர் கிருஷ்ணா, “டுவீட் செய்ததற்கு நன்றி ரஹ்மான் சார். நீங்கள் இல்லாமல் இது நடந்திருக்காது. சூர்யா, பூமிகா, ஜோதிகா, ஆர்டி.ராஜசேகர், கே.ஈ.ஞானவேல்ராஜா ஆகியோருக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.