பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
பிலிமினாடி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில், காயத்ரி சுரேஷ் தயாரிக்க, உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என, பன்மொழிகளில் உருவாகும் படத்தில், நடிகை ப்ரியாமணி கதை நாயகியாக நடிக்கிறார். படத்திற்கு, கொட்டேஷன் கேங்க் என தலைப்பு வைத்துஉள்ளனர்.
படம் குறித்து, இயக்குனர் விவேக் அளித்த பேட்டி:நாட்டில், அனைத்து பகுதியிலும், கூலிக்கு கொலை செய்யும் கூட்டம் உள்ளது. இதுபோன்ற கூட்டத்தில் நடக்கும் சில சம்பவங்களை, இப்படத்தில் கூறியுள்ளோம். பெண்களை மையப்படுத்திய கதை என்றாலே, பிள்ளை மற்றும் கணவருக்கு எதிராகவோ, ஆதரித்தோ வாழும் படம், கருத்து சொல்லும் படமாகவே இருக்கும்.
ஆனால், இந்த படம் முற்றிலும் வேறு மாதிரி இருக்கும். கதைக்கு, ப்ரியாமணி கச்சிதமாக பொருந்தியுள்ளார். மற்றொரு பாத்திரத்திற்கு, ஜாக்கிஷெராப் மற்றும் கோவிந்தா ஆகியோருடன் பேசி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.