யஷ் அடுத்த படம் 'கேஜிஎப் 3'யா ?, கன்னடப் படமா? | 100 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரர் ஐஸ்வர்யா ராய் | தனுஷ் நடித்துள்ள 'த கிரே மேன்' டிரைலர் இன்று வெளியீடு | ஒரே டைப் டிசைன்: பிரசாந்த் நீல் மீது விமர்சனம் | தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா? | குஷி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | நீதிமன்ற உத்தரவு ; தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட சேகர் | 68 வயதில் இயக்குனராக மாறிய வில்லன் நடிகர் | குட்டையான உடை அணிந்து குத்தாட்டம் போட்ட ஸ்ரீநீதி! | 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் அசத்திய தமிழ் திரைப்படம் |
ஹிந்தியை வைத்து மீண்டும் ஒரு அரசியல் களம் தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரு தினங்களாக திரைப்பிரபலங்களும் சேர்ந்து கொண்டு ‛ஹிந்தி_தெரியாது_போடா என்ற வாசகங்கள் இடம்பெற்ற டி-சர்ட்டை அணிந்து கொண்டு பிரச்சாரம் செய்கின்றனர். இதனால் ‛ஹிந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டாக் சமூகவலைதளத்தில் டிரண்ட் ஆனது. பதிலுக்கு ‛திமுக_வேணாம்_போடா என்ற ஹேஷ்டாக் டிரண்ட் ஆகி வருகிறது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக உள்ள பட்டதாரி, மாயநதி போன்ற படங்களில் நடித்த அபி சரணவன், சமூகவலைதளத்தில் ஒரு அருமையான பதிவை போட்டுள்ளார். அந்த நீண்ட பதிவு இதோ...
கடந்த இரு நாட்களாக #ஹிந்திதெரியாதுபோடா என்ற வாசகங்கள் பிரபலங்களால் பிரபலபடுத்தப்படுகிறது. அவர்களுக்கு எனது கண்டனங்களும், சகோதரத்துவ, நட்பு அடிப்படை சுட்டுகாட்டலும்.
ஹிந்தி என்பது ஒரு மொழி... தகவல்களை பரிமாறி கொள்ள இந்தியாவில் அதிகபடியாக பேசப்படும் மொழிகளில் ஒன்று.... நமது தாய்மொழியை தமிழ் நமக்கு உயிர்போல இந்தியை தாய்மொழியாக கொண்ட இந்தியர்களுக்கு அது ஒரு சிறப்பான உணர்வு.... ஒரு சில தீவிர ஹிந்தி மொழி பற்றாளர்கள், உணர்வாளர்கள் மற்றும் சில அரசியல்வாதிகள், அரசியல் ஆதாயங்களுக்காக ஹிந்தியை திணித்து, நமக்கு அதாவது நமது முதல் சந்ததிக்கு ஒருவித வெறுப்பை உருவாக்கிவிட்டனர்...
ஆனால் ஹிந்தியை படித்த பல ஆயிரகணக்கான நண்பர்கள் இன்று மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வெளிநாடுகளில் நல்ல பணியில் நல்ல சம்பளத்தில் பணி செய்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். மொழி மட்டுமல்ல எந்த ஒரு விசயத்தையும் வலுகட்டாயமாக திணித்தால் அல்லது கட்டாயப்படுத்தினால் இயற்கயாகவே ஒருவித வெறுப்பு உண்டாகும் என்பது மனிதன் இயல்பு..
நவீன காலத்தில் இன்றைய இளைஞர்களாகிய நாங்கள் ஹிந்தியை கற்காமல் உதாசீனபடுத்தியதால் வட நாடுகளுக்கு செல்லும் போது உணவு, உறைவிடம் மற்றும் இதர அடிப்படை தேவைகளுக்கு கூட அடுத்தவரிடம் தகவலை மொழியால் பரிமாற முடியாமல் சைகை மூலம் கஷ்டப்பட்டு பேச வேண்டியிருக்கிறது.
ஹிந்தி கற்பதால் நமது அறிவு மழுங்க போவதில்லை... ஹிந்தி ஒரு மொழியாக நிச்சயம் இந்த நவீன காலத்தில் கற்றுக் கொள்ளவதில் எந்த தவறும் இல்லை. அந்த கால மன்னர்கள், கவிஞர்கள், புலவர்கள் என பல மொழிகள் கற்றறிந்தவர்கள் கல்வி கேள்வியில் சிறந்து விளங்கினர். ஆனால் எந்த காலத்திலும் தமிழை திட்டமிட்டு தவிர்த்து அல்லது நீக்கி ஹிந்தியை திணித்தால் தமிழனாக ஒரு நொடிகூட அனுமதிக்க கூடாது, அனுமதிக்க முடியாது.
உதாரணமாக தமிழ்நாட்டில் உள்ள ஏடிஎம்கள் மெசின்கள் அறிவிப்பு பலகைகள், மத்திய அரசு அலுவலகங்களில் தமிழுடன் ஹிந்தியையும், ஆங்கிலமும் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் தமிழை தவிர்த்தால் தமிழ்நாடு மீண்டும் ஒரு பாடத்தினை உலகிற்கு கற்றுத் தரும் அது தமிழனின் மொழிப்பற்று வீரம், ஒற்றுமை.
ஆனால் ஒரு சில பிரபலங்கள் தங்களுக்கு லைக்குகள வாங்க #ஹிந்திதெரியாதுபோடா என்ற வாசகங்களை பிரபலபடுத்துவது இளைய சமுதாயத்தின் தரும் தவறான முன்னுதாரணம்... #ஹிந்திதெரியாதுபோடா என தனது பிடித்த பிரபலத்தின் போட்டோவை சமூக வலைதளததில் மட்டுமல்ல தனது மனத்திலும் பகிர்ந்து பதிந்து கொள்கின்றது இளைய சமுதாயம். எனவே நமது உயிருக்கு மேலான தாய்மொழி தமிழுக்கு முதலிடம் அளித்து ஆங்கிலம் மற்றும் ஹிந்தியை புறக்கணிக்காமல் அதையும் ஒரு மொழியாக நினைத்து கற்று கொள்ள வேண்டும், அது நிச்சயம் உதவும்...
ஹிந்தி எதிர்ப்பு பிரபலங்கள் தங்கள் #ஹிந்திதெரியாதுபோடா என்ற வாசகங்கள் நிறைந்த டி-சர்ட் போட்டோக்களை நீக்க அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.