Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

1650 ஏக்கர் காட்டை தத்தெடுத்த பிரபாஸ்

07 செப், 2020 - 18:15 IST
எழுத்தின் அளவு:
Prabhas-adopts-1650-acres-forest

'பாகுபலி' படங்களுக்குப் பிறகு தென்னிந்தியத் திரையுலகத்தில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக பிரபாஸ் உயர்ந்துவிட்டார். சில மாதங்களுக்கு முன்பு தெலங்கானா எம்.பி. சந்தோஷ் குமாருடன் சேர்ந்து 'கிரீன் இந்தியா சேலஞ்ச்'ன் அடுத்த கட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அதைத் தொடர்ந்து பல சினிமா பிரபலங்களும் மரங்களை நட்டார்கள்.

தற்போது ஐதராபாத் அருகில் துண்டிகல் என்ற இடத்தில் உள்ள காஜிபல்லி அர்பன் காட்டில் உள்ள 1650 ஏக்கரை தத்தெடுத்துள்ளார். அந்தக் காட்டின் நலனுக்காக பிரபாஸ் 2 கோடி ரூபாய் நன்கொடையாகக் கொடுத்துள்ளார். அக்காட்டினை தற்காலிக வியூ பாயின்ட் பகுதியில் இருந்து பிரபாஸ், சந்தோஷ்குமார் எம்.பி, வனத்துறை அமைச்சர் ஆகியோர் பார்வையிட்டனர். நலத்திட்டங்களுக்கான அடிக்கல்லை அவர்கள் இன்று(செப்.,7) நாட்டினர்.

மேலும், சிலரை இப்படி காட்டைத் தத்தெடுக்கும் விதமாக ஊக்குவிக்கப்போவதாக எம்.பி. சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நகர்ப்பகுதி சூழல் பூங்காவிற்கு பிரபாஸின் தந்தை யுவிஎஸ் ராஜு பெயர் சூட்டப்பட உள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
‛ஹிந்தி தெரியாது போடா, ‛திமுக_வேணாம்_போடா - மொழி அரசியல் எப்போது தீரும்?‛ஹிந்தி தெரியாது போடா, ... ‛ஹிந்தி_தெரியாது_போடா - தவறான முன்னுதாரணம் : அபி சரவணனின் 'நச்' பதிவு ‛ஹிந்தி_தெரியாது_போடா - தவறான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
08 செப், 2020 - 05:42 Report Abuse
NicoleThomson முதலில் காடுகளின் உள்ளே லோக்கல் அரசியல்வாதிகள் நுழைய தடை போடுங்க சார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in