Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛ஹிந்தி தெரியாது போடா, ‛திமுக_வேணாம்_போடா - மொழி அரசியல் எப்போது தீரும்?

07 செப், 2020 - 18:07 IST
எழுத்தின் அளவு:
Hindi-issue-reflected-in-Kollywood-and-trends-in-social-media

சென்னை: ‛ஹிந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக்கிற்கு பதிலடியாக, சமூக வலைதளங்களில் ‛திமுக_வேணாம்_போடா என்ற ஹேஷ்டேக் வைரலானது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னை விமான நிலையத்தில், இந்தி தெரியாது எனக்கூறிய, திமுக எம்.பி., கனிமொழியை , அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிஐஎஸ்எப் அதிகாரி ஒருவர் நீங்கள் இந்தியரா என கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறனும் தனக்கு ஹிந்தி தெரியாத காரணத்தால், விமான நிலைய ஊழியர்கள் மோசமாக நடத்தியதாக சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயத்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார். இதனால், ஹிந்தி குறித்து சமூக வலைதளவாசிகள் இடையே மீண்டும் பரபரப்பு உருவானது. குறிப்பாக திரைப்பிரபலங்கள் இந்த விஷயத்தை கையில் எடுத்தனர்.



சமூக வலைதளத்தில் ஹிந்தி_தெரியாது_போடா என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளத்தில் வைரலானது. வெற்றிமாறனுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் சிரீஸ் ஆகியோர் ‛நான் தமிழ் பேசும் இந்தியன், ‛ஹிந்தி தெரியாது போடா என்ற வாசகங்கள் அடங்கிய டிசர்ட்டுகளை அணிந்து டுவிட்டரில் புகைப்படம் வெளியிட்டனர். அதில் திருவள்ளுவர் படமும் இருந்தது. தொடர்ந்து, நடிகர் சாந்தனு, அவரது மனைவி கீர்த்தி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என இந்த பட்டியல் நீண்டது. இதை சுட்டிக்காட்டி தி.மு.க., எம்.பி., கனிமொழி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

பா.ஜ.,வின் வானதி சீனிவாசன் கூறுகையில், டீ ஷர்ட் மூலம் ஒரு போதும் தமிழை வளர்த்தெடுக்க முடியாது. தமிழ் வளர்ச்சிக்காக உண்மையான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். மொழி திணிப்பு என்பதை பா.ஜ.,வும் எதிர்க்கத்தான் செய்கிறது என்றார்.




இதையடுத்து, ஹிந்தி_தெரியாது_போடா என்ற ஹேஷ்டேக் போட்டியாக ‛திமுக_வேணாம்_போடா என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது. குறிப்பாக யுவனின் டீ-சர்ட்டில் இருந்த வள்ளுவரே, எழுத்தாணியை எடுத்து கோபமாக உன்னோட போதைக்கு நான் ஊறுகாயா ஆள விடுங்கடா சாமி. ‛திமுக_வேணாம்_போடா என கூறுவது போன்ற மீம்ஸ்கள் வெளியாகின. தொடர்ந்து திமுக.,வை எதிர்த்து இந்த ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது.

எப்போது தீரும் மொழி அரசியல்
இது தொடர்பாக ஓய்வு பெற்ற மதுரை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: நடிகர்கள், தங்கள் விரும்பியபடி புகைப்படம் வெளியிடுவது அவர்களது உரிமை. அதில் யாரும் தலையிடுவதற்கில்லை. ஆனால், படங்களில் நடிக்க ஹிந்தியில் இருந்து தான் நடிகைகளை அழைத்து வருகிறீர்கள். ஏன் தமிழகத்தில் நடிகைகள் யாரும் இல்லையா? ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்தாலும் அங்கு நடிக்க செல்கிறீர்கள். அப்போது ஹிந்தி பிரச்னையாக தெரியவில்லையா. அப்போது மட்டும் ஹிந்தி தேவைப்படுகிறதா?



மொழி என்பது அவரவவர் விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாது. ஆனால், தமிழகத்தில் பல ஆண்டுகளாக மொழியை வைத்து அரசியல் செய்கின்றனர். எப்போதும், இந்த பிரச்னை தீரும் என தெரியவில்லை. பல அரசியல் தலைவர்கள் பள்ளி நடத்துகின்றனர். அங்கு ஹிந்தி படிக்க வேண்டும் என கூறுகின்றனர். வெளியே வந்து ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றார்.

கொரோனா காலத்தில் பலர் தங்களது வாழ்வாதாரத்தை தக்க வைத்து கொள்ள போராட்டம் நடத்தி வரும் சூழலில் சிலர் இப்போது கூட மொழி பிரச்னையை கையில் எடுத்து அரசியல் செய்வது வேதனையாக இருக்கிறது என்பதை சாமானிய மக்களின் கருத்தாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (50) கருத்தைப் பதிவு செய்ய
லிடியன் நாதஸ்வரத்திற்கு நாதஸ்வரம் வழங்கிய இளையராஜாலிடியன் நாதஸ்வரத்திற்கு நாதஸ்வரம் ... 1650 ஏக்கர் காட்டை தத்தெடுத்த பிரபாஸ் 1650 ஏக்கர் காட்டை தத்தெடுத்த பிரபாஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (50)

chandrasekar - SINGAPORE,சிங்கப்பூர்
09 செப், 2020 - 18:02 Report Abuse
chandrasekar என்ன கொடுமை சரவணன் சார். திருவள்ளுவர் படத்தை போட சொன்னால் கமலஹாசன் படத்தை போட்டுவிட்டார்கள்
Rate this:
Anvar - Singapore,இந்தியா
09 செப், 2020 - 08:01 Report Abuse
Anvar யுவன் பேசின மேடையெல்லாம் பாருங்க அய்யா ஆங்கிலத்துல தான் பேசுவார் .. தமிழ் கொஞ்சம் கொஞ்சம் .. இவனெல்லாம் தமிழ் பற்று பத்தி பேசறான் வெட்கக்கேடு
Rate this:
யார்மனிதன் - Toronto,கனடா
08 செப், 2020 - 21:35 Report Abuse
யார்மனிதன் ஏன் பார்த்தசாரதிகள் பதறுகிறார்கள்
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
08 செப், 2020 - 20:55 Report Abuse
கொக்கி குமாரு கனிமொழியின் குடும்பம், சொந்தத்தில் உள்ள எல்லா குழந்தைகளும் மற்றும் கனிமொழி கட்சியின் எல்லா முக்கிய அல்லக்கைகளின் குழந்தைகளும் ஹிந்தி கற்றுக்கொடுக்கும் CBSE ஸ்கூலில் படிக்குது என்பது தலைமுறை குடும்ப கொத்தடிமை உடன்பிறப்புகளுக்கு தெரியாது போடா...திருட்டு திமுக வேண்டாம் போடா...
Rate this:
ராமதாசன் - chennai,இந்தியா
08 செப், 2020 - 20:06 Report Abuse
ராமதாசன் இவங்க பெயரை பாருங்க - யுவன் / சிரீஷ் / சந்தனு - எவ்வளவு சுத்தமான தமிழ் பெயர்கள் .. கீர்த்தி உனக்கும் ஹிந்தி தெரியும்னு எல்லோருக்கும் தெரியும்..உனக்கு எதுக்கு. யுவன் - பெற்றவர்களை விட்டு ஓடுன உனக்கு தாய் மொழி பற்றி பேச என்ன இருக்கு.. நீ பொய் இருக்கிற வீட்டில் தமிழ் பேசுறாங்களா இல்லை வேற மொழி பேசுறாங்களா - அந்த மொழி கத்துக்குங்க சீக்கிரம் இல்லாவிடில் அவங்க தமிழர்க மாதிரி பொறுமையா இருக்க மாட்டாங்க -
Rate this:
மேலும் 45 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in