சிறுமிக்கு பாலியல் தொல்லையா? : காமெடி நடிகர் டேனியல் பற்றி இணையத்தில் பரபரப்பு | அரசியல் ரசிகர்களுக்கு மே 2 : அஜித் ரசிகர்களுக்கு மே 1 | ஐதராபாத்தில் ரத்தாகும் படப்பிடிப்புகள் : 'அண்ணாத்த' நிலை என்ன ? | இன்று முதல் 3 காட்சிகள் மட்டுமே... | "மிஸ்டர் காப்ளர்" - சாதனை குறும்படத்திற்கு விருது வழங்கி கவுரவம் | கனியை வீட்டுக்கும் சென்று பாராட்டிய சிம்பு | பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசளித்த சமந்தா | ஷங்கர் படத்தில் விஜய்சேதுபதி? | கொரோனாவிலிருந்து மீண்டு ரன்பீருடன் மாலத்தீவு பறந்த ஆலியா பட் | எம்.ஜி.ஆர்.மகன் ரிலீஸ் தள்ளி வைப்பு |
தமிழ் டிவிக்களில் முதல் முறையாக 2017ம் வருடம் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஆரம்பமானது. கமல்ஹாசன் தொகுத்து வழங்க ஆரம்பித்த அந்த முதல் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானதற்குக் காரணம் ஓவியா. அவருடைய செல்லச் செல்ல சில்மிஷங்கள், சண்டைகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. அதனால், அவருக்கு 'ஓவியா ஆர்மி' என ரசிகர்கள் கூட்டம் தனியாகவும் களமிறங்கின.
நிகழ்ச்சியில் ஓவியாவும் மற்றொரு போட்டியாளரான ஆரவ்வும் காதலில் விழுந்ததாக ஒரு பரபரப்பு நிலவியது. அதன்பின் சில சர்ச்சைகள் எழுந்து, திடீரென அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் ஓவியா. ஆனாலும், அதன்பின் அவரும் ஆரவ்வும் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். இருந்தாலும் தங்களுக்குள் காதல் இல்லை என்றுதான் சொன்னார்கள்.
இந்நிலையில் ஆரவ், நடிகையான ராஹி என்பவரை நேற்று திருமணம் செய்து கொண்டார். அந்த நிகழ்வில் அவருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற போட்டியாளர்களான, சினேகன், வையாபுரி, காயத்ரி ரகுராம், ஆர்த்தி, பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், சுஜா, கணேஷ் வெங்கட்ராம், காஜல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். ஓவியா வந்து வாழ்த்தவில்லை.
கொரானோ ஊரடங்கு இருப்பதால் ஓவியா கேரளாவில் உள்ள அவரது வீட்டில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும் சமூக வலைத்தளத்தில் கூட வாழ்த்தாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.