விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |
தன்னுடைய 50வது படமான 'மங்காத்தா'வில் வில்லனாக நடித்து மாபெரும் வெற்றி கண்டவர் நடிகர் அஜித். வெங்கட் பிரபு இயக்கிய அந்தப் படம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அஜித்தின் திரை வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பிடித்த இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர்.
எனவே, அடிக்கடி வெங்கட் பிரபு உள்ளிட்டோரிடம் மங்காத்தா 2 பற்றிய அப்டேட்டுகளை கேட்டு ரசிகர்கள் நச்சரித்து வருகின்றனர். அவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சுப்பு பஞ்சு, '10 வருடத்திற்கு முன்பே மங்காத்தா 2 கதையை வெங்கட் பிரபு எழுதிவிட்டார். இரண்டாவது பாகம் தயாராக அஜித் ஓகே சொன்னால் உடனே படம் தயார் தான்' என்று கூறியிருந்தார்.
இந்தத் தகவல் கொஞ்சம் கொஞ்சமாக திரிந்து, விரைவில் மங்காத்தா 2 பட வேலைகள் ஆரம்பிக்கப் போவதாக இணையத்தில் ஒரு தகவல் உலா வர ஆரம்பித்து விட்டது. இது அஜித் ரசிகர் ஒருவர் மூலம் வெங்கட் பிரபு கவனத்திற்கும் சென்றுள்ளது.
அந்தச் செய்தியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வெங்கட் பிரபு, தனது எண்ணங்களை எமோஜியாக வெளியிட்டுள்ளார். இதனால் மங்காத்தா 2 படம் எப்போது என்பது பற்றி மீண்டும் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.