நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
நடிகர் ஆதியும், நடிகை நிக்கி கல்ராணியும் மரகதநாணயம் படத்தில் சேர்ந்து நடித்தனர். இந்த படம் சூப்பர் ஹிட்டானதால் இருவருக்கும் இடையேயான நட்பும், நெருக்கமும் அதிகமானது. ஆதியின் தந்தை பிறந்தநாள் விழாவில் நிக்கி கலந்து கொண்டதை அடுத்து, இருவரும் காதலிப்பதாக கோலிவுட்டில் ஒரு பேச்சு இருந்து வந்தது. சமீபத்தில் இருவருக்கும் ஒரே சமயத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனாவுக்கு எதிரான தங்களுடைய போராட்ட அனுபவத்தை இருவருமே பகிர்ந்திருந்தனர்.
இந்நிலையில் நிக்கியும், ஆதியும் விமான நிலையத்தில் பெட்டிகளை தள்ளிக்கொண்டு செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இருவரும் ஒரு சிறிய விடுமுறைக்காக வெளியூர் செல்வதற்காக விமான நிலையம் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஏற்கனவே இருந்து வந்த காதல் பேச்சை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளதாக இருக்கிறது.