நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
கேம்பிரிட்ஜ் இளவரசர் ஹாரி மற்றும் இளவரசி மேகன் மார்கல் ஆகியோர் சில மாதங்களுக்கு முன்னர் கருத்து வேறுபாடு காரணமாக பக்கிங்காம் அரண்மனையை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடியேறினர். அங்கு இவர்கள் சொந்த தொழில் தொடங்க ஆயத்தம் ஆனதாக செய்திகள் வெளியானது. இனி அரச குடும்பத்தில் இருந்து தாங்கள் நிரந்தரமாகப் பிரியவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
கருப்பினத்தவரான மேகன், முன்னாள் அமெரிக்க தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு கோலாகலமாக பிரிட்டன் சசக்ஸ் அரண்மனையில் நடைபெற்றது. பின்னர் பக்கிங்காம் அரண்மனையில் இனப்பாகுபாடு காரணமாக அவர் ஒதுக்கப்படுவதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
தற்போது அமெரிக்காவில் வசிக்கும் இந்த தம்பதி பிரபல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான நெட்பிளிக்ஸ் உடன் இணைந்து ஓர் சீரிஸ் தயாரிக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேகன் மார்கெல் திருமணத்திற்குப் பின்னர் நடிப்பதை நிறுத்திவிட்டார். மீண்டும் அவர் நெட்பிளிக்ஸ் மூலம் நடிப்பதை தொடர்வாரா என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பியபோது இல்லை என்றே பதில் வந்துள்ளது. வெப் சீரிஸ் தயாரிப்பதோடு நிறுத்திக் கொள்வதாகக் கூறப்படுகிறது.
வெப் சீரிஸ் மட்டுமல்லாமல் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஆவணப்படங்கள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் தயாரிக்க உள்ளதாக இந்த தம்பதி அறிவித்துள்ளனர். கடந்த 2011 முதல் 2018 வரை அமெரிக்கா தொலைக்காட்சி சேனல் ஒன்றில் மேகன் மார்க்கில் நடிப்பில் வெளியான 'ஸ்யூட்ஸ்' சீரியஸ் ரசிகர்களின் ஏகோபித்த வரவை வரவேற்பை பெற்றது.
ஹாரி-மேகன் தம்பதி தாங்கள் தயாரிக்கவுள்ள வெப் சீரீஸில் நடிக்காவிட்டாலும் வாய்ஸ் ஓவர் மற்றும் டப்பிங் கொடுக்க சம்மதித்துள்ளனர். அவர்களது குரலில் கதாபாத்திரங்கள் நடிப்பது பிரிட்டன் அரச குடும்ப ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.