Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெயம் ரவி பட நடிகை மீது தாக்குதல் : போலீசில் புகார்

05 செப், 2020 - 12:13 IST
எழுத்தின் அளவு:
Actress-Samyuktha-Hegde-attacked-by-public-in-the-park

2019ம் ஆண்டின் வெற்றிப் படங்களில் ஒன்றான கோமாளி படத்தில் ஜெயம் ரவியின் பள்ளி காலத்து காதலியாக நடித்தவர் கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே. அவர் பெங்களூருவில் உள்ள பார்க் ஒன்றில் தனது தோழிகளுடன் உடற்பயிற்சி செய்துள்ளார். அப்போது ஒரு பெண்மணியும், சில ஆண்களும் சேர்ந்து சம்யுக்தா மற்றும் அவரது தோழிகளை கடுமையான வார்த்தைகளைச் சொல்லி திட்டியும், தாக்கியும் உள்ளனர்.

உடற்பயிற்சி செய்வதற்கு வசதியாக அவர்கள் அணிந்த ஸ்போர்ட்ஸ் ஆடை ஆபாசமாக இருப்பதாகவும், இதுவா நமது கலாச்சாரம் என அந்தப் பெண்மணியும், ஆண்களும் தாக்கியதாகத் தெரிகிறது.

இது குறித்து உடனடியாக இந்த சம்பவத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையாக வெளியிட்டார் சம்யுக்தா. தனது உடற்பயிற்சி உடையை அப்பகுதி மக்கள் ஆபாச உடை எனக் கூறுவதாகவும் அவர் புகார் கூறினார். சில ஆண்கள் தற்போது கன்னட சினிமாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் போதைப் பொருள் வழக்கில் இவரையும் தொடர்புபடுத்த போவதாக சிலர் மிரட்டுவதாகவும் சம்யுக்தா தெரிவித்தார்.

இந்த நேரலையிலேயே சம்யுக்தாவை பலர் தரக்குறைவாகப் பேசியுள்ளனர். மேலும் அந்த வீடியோவில் காக்கி உடையில் சிலர் உள்ளனர். அவர்கள் போலீசாரா அல்லது அந்த பூங்காவின் காவலாளிகளா எனத் தெரியவில்லை.

சம்யுக்தாவையும் அவரது தோழிகளையும் அங்கிருந்தவர்கள் பூங்காவை விட்டு வெளியேச் செல்ல இயலாதவாறு கதவுகளை பூட்டி வைத்திருந்ததாகத் தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்க இருப்பதாக அந்த வீடியோவில் சம்யுக்தா கூறியுள்ளார்.

பொது இடத்தில் நடிகை ஒருவர் மீது தாக்குதல் முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல் துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசிலும் புகார் அளித்துள்ளார் சம்யுக்தா.

நேற்று, ஜெயம் ரவி ஜோடியாக நிமிர்ந்து நில் படத்தில் நடித்த ராகினி திரிவேதி போதைப் பொருள் விவகாரத்திற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஜெயம் ரவியின் ஜோடியாக நடித்த மற்றொரு கன்னட நடிகையும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.










View this post on Instagram
















Video 1 and 2, you can see the lady clearly (kavitha reddy) charging at my friend and attempting to hit her Video 3: after she tried to assault my friend, when we were waiting for the police to arrive some People in the park who knew her started supporting her and playing moral police and asking us if it is our culture to wear sports wear Video 4: this man in the red checkered shirt and about 10 men with her arrived right before the police did and started threatening us. His name is Anil, and you can clearly hear him threatening me. In my line of work even false news is enough to destroy my career and he threatened me exactly of that and the police stood there and just watched. This is when i decided to go live and have our side of the story put out there in the open After being in a democracy and following all the norms of social distancing, we were abused and ridiculed by Kavitha Reddy and the mob in Agara Lake for practicing our hoolahoop while wearing sportswear. Despite being polite and trying to solve the problem, the lady hit my friend and used disparaging remarks about me and my friends Was extremely disappointed with how the police who came to the location behaved , like nothing was wrong and spoke to her with respect while asked us to be quite. The cops stood there while her mob harassed us and even after requesting the police continuously, they decided to stand there and support this (proof on igtv) Yesterday was really hard and it was so disturbing to go through this When we went to the police station, everyone there already knew her and spoke to her nicely and saw us like we were wrong. The only police who spoke to us with some respect and told her she was wrong was the inspector is the hsr police station muni reddy, he asked us both to file our respective complaints and he left. We wrote the complaint and gave it to the police. The police present there refused to give us an acknowledgement for the same. Its not easy being strong around people who are trying to break you, and having to listen to so many people harass us for doing nothing. THIS IS JUST WRONG I request you all for your support 💛 @blrcitypolice #thisiswrong #punishkavithareddy

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on



Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தமன்னாவின் அன்புக்குரிய அனுஷ்காதமன்னாவின் அன்புக்குரிய அனுஷ்கா ஐ.சி.யூ.,வில் கேக் வெட்டி திருமணநாளை மனைவியுடன் கொண்டாடினார் எஸ்.பி.பி.,! ஐ.சி.யூ.,வில் கேக் வெட்டி திருமணநாளை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் எங்கோ யாரோ பற்றிய செய்தியில் தமிழ் நடிகனை முடிச்சு போட்டு தமிழ் பத்திரிகையே தமிழனை அவமானப் படுத்த வேண்டுமா? மல்லாக்கப் படுத்துக் கொண்டு மார்பில் துப்பிக் கொளவதேன்? இதன் நோக்கம் / பின்னணி என்ன?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in