விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |
மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். தமிழில் கனா கண்டேன், மொழி, வெள்ளித்திரை, காவியத் தலைவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். மோகன் லால் நடித்த லூசிபர் படம் மூலம் இயக்குனராகவும் மாறினார். அப்படம் கடந்த ஆண்டின் மிகப் பெரும் வெற்றி பெற்ற மலையாளப் படங்களுள் ஒன்றாக அமைந்தது.
நேற்று டுவிட்டர் தளத்தில் திடீரென மைக்கேல் மதன காமராஜன் படம் பற்றிய பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “மைக்கேல் மதன காமராஜன் படத்தை விட வெகு சில படங்கள் மட்டுமே உங்களை மகிழ்ச்சிப்படுத்தும். உலக சினிமாவில் சிறந்த ஒருவர் கமல்ஹாசன். ஊர்வசி சேச்சியும் சாதனையாளர். ஆல் டைம் கிளாசிக் படத்தை, நடு இரவில் மீண்டும் மனைவியுடன் பார்க்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய இந்தப் பதிவிற்கு ஆயிரக்கணக்கானோர் லைக் போட்டுள்ளார்கள். தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த நகைச்சுவைப் படங்களில் மைக்கேல் மதன காமராஜன் படத்திற்குத் தனி இடமுண்டு. நான்கு வேடங்களிலும் கமல்ஹாசனின் நகைச்சுவை நடிப்பை இன்றைய அளவிலும் ஏன் எதிர்காலத்திலும் யாராலும் மிஞ்ச முடியாது என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் எண்ணமாக இருக்கும்.