Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகார்த்திகயேனை நெகிழ வைத்த பவன் கல்யாண்

04 செப், 2020 - 11:37 IST
எழுத்தின் அளவு:
Pawan-Kalyan-thanks-to-Sivakarthikeyan

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் இரு தினங்களுக்கு முன்பு அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். வழக்கம் போல சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ்த் திரையுலகத்திலிருந்தும் பலரும் அவரை வாழ்த்தினர். அவர்களில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருவர். தன்னை வாழ்த்திய சினிமா பிரபலங்கள் ஒவ்வொருவருக்கும் அட்மின் மூலம் பதில் போடாமல் பவன் கல்யாணே பதிலளித்தார். அவருடைய பதிலில் இருந்தே அதைப் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு பிரபலங்களுடனும் அவருடைய அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு அளித்த பதிலில், “உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. உங்கள் வெற்றிக்கு எனது வாழ்த்துகள். உங்களின் 'ஊதா கலரு ரிப்பன்' பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். எண்ணிக்கை இல்லாமல் அந்தப் பாடலைப் பார்த்திருக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதனால் நெகிழ்ந்த சிவகார்த்திகேயன், “உங்கள் பதிலுக்கு மிகவும் மகிழ்ச்சி சார். ஊதா கலரு ரிப்பன் பாடல் உங்களுக்குப் பிடிக்கும் என்பது மிகப் பெரும் மகிழ்ச்சி. உங்கள் அன்பான வார்த்தைகளால் நேரம் எடுத்துக் கொண்டு உங்கள் அன்பை வெளிப்படுத்தியதற்கு பெரிய நன்றி சார்,” எனக் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
போதைப் பொருள் : ஜெயம் ரவி பட நடிகை ராகினி கைதுபோதைப் பொருள் : ஜெயம் ரவி பட நடிகை ... உலக சினிமாவில் சிறந்த ஒருவர் கமல்ஹாசன் - பிருத்விராஜ் உலக சினிமாவில் சிறந்த ஒருவர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Muruga Vel - Mumbai,இந்தியா
05 செப், 2020 - 08:37 Report Abuse
 Muruga Vel அந்த பாட்டு என்னமோ எக்சசைஸ் பண்ணறதுக்கு போட்ட டியூன் மாதிரி இருக்கும் ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in