ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் 1947 | கன்னடத்தில் திரிஷ்யம் 2 : பி வாசு இயக்குகிறார் | அகோரியாக அதிரவைக்கும் பாலகிருஷ்ணா | ரிலீஸ் தேதியுடன் ஜூனியர் என்டிஆரின் புதுப்பட அறிவிப்பு | ராதே ஷ்யாம் புதிய போஸ்டர் வெளியீடு | கர்ணன் - தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி | கொரோனாவிலிந்து மீண்டுவிட்டோம் - மாதவன் | சாந்தி வாழ்க்கை படம் துவங்கியது | தனுஷிற்கு ஜோடியாகும் உப்பெனா நாயகி | கபடி பயிற்சியில் துருவ் விக்ரம் |
திரையுலகத்தில் உள்ள சில பிரபலங்கள் போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கியுள்ளார்கள். ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்குப் பிறகு இந்த போதைப் பொருள் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தற்போது கன்னடத் திரையுலகத்திலும் இந்த போதை விவகாரம் எதிரொலித்துள்ளது. தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக நிமிர்ந்து நில் படத்தில் நடித்தவர் ராகினி திவேதி. கன்னடம், மலையாளம், தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு ராகினியின் நண்பரான ரவி என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து ராகினியை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். ஆனால், குறுகிய காலத்தில் அது கிடைத்ததால் ராகினி ஆஜராகவில்லை.
இந்நிலையில் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று இன்று(செப்.,4) காலையில் ராகினி வீட்டில் போலீசார் சோதனையிட்டனர். இந்த விவகாரத்தில் ராகினி கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
கன்னடத் திரையுலகத்தில் மட்டும் 15 சினிமா பிரபலங்கள் போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் சிக்கலாம் என்கிறார்கள்.