Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரண்மனை 3: முதன்முறையாக பேய் வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகர்

04 செப், 2020 - 08:55 IST
எழுத்தின் அளவு:
Aranmanai-3-:-Arya-in-devil-role

சுந்தர்.சி இயக்கத்தில் 'அரண்மனை' மற்றும் 'அரண்மனை 2' என இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது அரண்மனை படத்தின் மூன்றாவது பாகத்தை எடுத்து வருகிறார் சுந்தர்.சி. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

முதல் இரண்டு பாகங்களில் ஹன்சிகா பேயாக நடித்திருந்தார். பேய் பிடித்த கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியாவும், திரிஷாவும் நடித்திருந்தார்கள். மூன்றாவது பாகத்தில் ஆர்யா நாயகனாக நடிக்க, நாயகிகளாக ராஷிகன்னாவும், ஆண்ட்ரியாவும் நடித்துள்ளனர். பிக் பாஸ் சாக்ஷி அகர்வாலும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பொதுவாக பேய்ப்படம் என்றாலே பெண்கள் தான் பேயாக இருப்பார்கள். அந்த இலக்கணத்தை உடைத்து ஆண் பேயைப் பழிவாங்க வைத்தவர் லாரன்ஸ். அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது அதே பாணியில் அரண்மனை 3ம் பாகத்திலும் ஆண் பேய் இருப்பதாகவும், அந்தக் கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதைச் சிறப்பாகச் செய்யக் கூடியவர் ஆர்யா. எனவே நிச்சயம் இந்தப் பேய் கதாபாத்திரத்திலும் மிரட்டுவார் என்றே எதிர்பார்க்கலாம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
திங்கட்கிழமைக்குள் நல்ல செய்தி: எஸ்.பி.பி., மகன் நம்பிக்கைதிங்கட்கிழமைக்குள் நல்ல செய்தி: ... போதைப் பொருள் : ஜெயம் ரவி பட நடிகை ராகினி கைது போதைப் பொருள் : ஜெயம் ரவி பட நடிகை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05 செப், 2020 - 04:57 Report Abuse
J.V. Iyer நல்ல தோற்றம் உள்ள ஒருசில தமிழ் நடிகர்களில் ஆர்யாவும் ஒருவர். இவர் எதற்கு இப்படி? மற்ற நிறைய தமிழ் நடிகர்களை பேய்வேடத்தில் நடிக்கவைக்க மேக்கப் போடவேண்டாமே அவர்களுக்கு மேக்கப் போட்டாலும் பேய்மாதிரி இருப்பார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in