கவுதம் கார்த்திக்கின் ‛ஆகஸ்ட் 16 1947' பட டீசரை வெளியிட்ட சிம்பு! | ஸ்பெயின் நாட்டில் இந்திய தேசியக் கொடியை பறக்க விட்ட நயன்தாரா -விக்னேஷ் சிவன் | விஜய்யின் 67வது படத்தில் இணைந்த கவுதம் மேனன் | விடுதலையில் நானே வேறொருவனாக தெரிகிறேன்: சூரி பேச்சு | கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை: வாணி போஜன் | நீங்கள் தெய்வக்குழந்தை அப்பா: 47 ஆண்டுகள் நிறைவு செய்த ரஜினிக்கு மகள் வாழ்த்து | நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை | பேருந்தில் பயணம் செய்யும் நடிகர் அஜித்... வைரலாகும் வீடியோ! | 'லால் சிங் சத்தா' தோல்வி, அழைப்புகளைத் தவிர்க்கும் ஆமீர்கான் | மிருணாள் தாகூர் புகைப்படங்களைத் தேடும் ரசிகர்கள் |
ஷங்கரின் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் நகுல். நடிகை தேவயானியின் தம்பியான நகுல், காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஸ்ருதி என்ற தனது நீண்ட்நாள் தோழியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நகுல். இந்தத் தம்பதிக்கு சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. மகளுக்க அகீரா என பெயரிட்டுள்ளனர்.
இந்நிலையில் தங்களது மகளுக்கு ஒரு மாதம் ஆனதை ஒட்டி, நகுலும், ஸ்ருதியும் பிரசவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். அதன் மூலம் வெளிநாடுகளில் அதிகம் பழக்கத்தில் இருப்பது போல் வாட்டர் பெர்த் முறையில் ஸ்ருதிக்கு பிரசவம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
அந்த புகைப்படங்களுடன் கூடவே ஸ்ருதி உணர்ச்சிகரமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்களுக்கு நன்றி கூறி இருப்பதுடன், தனது வாட்டர் பெர்த் அனுபவங்களையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். ஸ்ருதி நகுலின் இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளன.