'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார் | லண்டனில் ‛பொன்னியின் செல்வன் 2' பின்னணி இசை மும்முரம் | தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த நிவேதா பெத்துராஜ் | 'ஆர்ஆர்ஆர்' ஆஸ்கர் விருதுக்காக நான் செலவு செய்யவில்லை - தயாரிப்பாளர் டிவிவி தனய்யா | சிரஞ்சீவியின் சகோதரர் மகள், கணவருடன் கருத்து வேறுபாடு? | பெண் அரசியல்வாதி என்றால் சேலை தான் கட்ட வேண்டுமா? - மஞ்சு வாரியர் | பிறக்கும்போதே பெற்றோரை குழப்பி விட்டேன் ; ராணி முகர்ஜி கலாட்டா | 130 பேருக்கு 10 கிராம் தங்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | ஏழைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அறிவித்த பாலகிருஷ்ணா | உண்மையாகவே மது அருந்தினாரா நானி |
வளர்ந்து வந்த பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டது பாலிவுட்டையே அசைத்து விட்டது. தற்போது இந்த தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சுஷாந்தின் முன்னாள் காதலி ரியா சக்ரவர்த்தி முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படுகிறார். அவரிடம் இரண்டு முறை பல மணி நேரம் சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.
ரியா சக்ரவர்த்தியை இணைய தளத்தில் சுஷாந்த ரசிகர்கள், கடுமையாக விமர்சித்தும், ஆபாசமாக சித்தரித்தும் வருகிறார்கள். இந்த நிலையில் "ரியாவை மீடியாக்கள் பெரும் குற்றவாளி போன்று சித்தரிக்கிறது. ஒருவர் குற்றவாளியா இல்லையா என்பதை கோர்ட் சொல்லட்டும், மீடியாக்கள் சொல்ல வேண்டாம். ரியாவின் குடும்பம் படும் வேதனையை மற்றவர்கள் உணர வேண்டும்" என்று ரியாவுக்கு ஆதரவாக நடிகை டாப்ஸியும், தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சுவும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இதே கருத்தை பாலிவுட் நடிகை வித்யா பாலனும் தெரிவித்திருக்கிறார். அவர் தனது டுவிட்டரில் "ரியாவை வில்லியாக சித்தரிப்பதை பார்த்து என் நெஞ்சம் வெடிக்கிறது. விசாரணை அதிகாரிகள் மீதும், நீதித்துறை மீதும் நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் உண்மையை கண்டுபிடிப்பார்கள். அதற்குள் நீங்கள் தீர்ப்பு எழுதிவிடாதீர்கள்."என்று எழுதியிருக்கிறார்.
இப்போது சுஷாந்த் ரசிர்களும், அபிமானிகளும் வித்யா பாலன் பக்கம் திரும்பி அவரை கடுமையை விமர்சித்து வருகிறார்கள்.