Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சென்னையில் அடுத்தடுத்து மூடப்படும் தியேட்டர்கள்

03 செப், 2020 - 12:44 IST
எழுத்தின் அளவு:
Theatres-continuously-shttuing-down

தென்னிந்தியாவில் சினிமாவின் தலைமையகம் என்றால் அது சென்னைதான். இங்கிருந்துதான் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரைப்படங்கள் தயாராகின. ஏன், ஹிந்திப் படங்கள் கூட இங்கு அதிகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

சுறுசுறுப்பான திறமையான பணியாளர்கள், அனைத்து தொழில்நுட்ப வசதிகள் என இருந்த சென்னை, காலப்போக்கில் தனது பெருமையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.

சென்னையில் இருந்த பல பழைய ஸ்டுடியோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்பட்டன. பழமையான ஏவிஎம் ஸ்டுடியோவில் கூட பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாறிவிட்டன. பிரசாத் ஸ்டுடியோ மட்டுமே பெயரளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கும் ஸ்டுடியோக்களை மூடி வேறு கட்டிடம் எழுப்ப திட்டமிட்டு வருகிறார்கள்.

தற்போதைக்கு சென்னையில் புறநகர் பகுதியில் உள்ள இவிபி ஸ்டுடியோவில் மட்டும்தான் திரைப்படப் படப்பிடிப்புகள், டிவி தொடர் படப்பிடிப்புகள் அதிகம் நடந்து வருகின்றன.

சென்னையில் மேலும் பல ஸ்டுடியோக்களை உருவாக்க திரையுலகினரே ஆர்வம் காட்டவில்லை. அதனால் பல படங்களின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் உள்ள ஸ்டுடியோக்களில் நடைபெறுகிறது. இதனால் தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு மிகவும் குறைந்துவிட்டது.

ஸ்டுடியோக்கள் ஒரு புறம் மூடப்பட்டுவிட்ட நிலையில், அடுத்து பல பழைய தியேட்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக மூடப்பட்டு வருகின்றன. கொரானோ ஊரடங்கு ஆரம்பமான சில வாரங்களுக்குள்ளேயே சென்னையின் பழைமையான தியேட்டர்களான வட பழனியில் உள்ள ஏவிஎம் ராஜேஸ்வரி, வண்ணாரப்பேட்டையில் உள்ள மகாராணி ஆகிய தியேட்டர்கள் மூடப்படுகின்றன என்ற செய்தி சினிமா ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.

தற்போது தண்டையார்பேட்டையில் உள்ள மற்றொரு பழமையான தியேட்டரான அகஸ்தியா தியேட்டரும் மூடப்படுகிறது. சென்னையில் இருந்த ஒரு சில 70 எம்எம் தியேட்டர்களில் இத்தியேட்டரும் முக்கியமான ஒன்று. ஏற்கெனவே மூடப்பட்ட மகாராணி தியேட்டரும், அகஸ்தியா தியேட்டரும் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தியேட்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வட சென்னையின் சினிமா ரசிகர்களுக்கு இந்த இரண்டு தியேட்டர்களுமே விருப்பமான தியேட்டர்களாக இருந்தன.

அடுத்தடுத்து மூன்று தியேட்டர்கள் சென்னையில் மூடப்பட்ட நிலையில் மேலும் சில தியேட்டர்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரானோ ஊரடங்கை காரணம் காட்டி ஐந்து மாதங்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இன்னும் சில மாதங்கள் இதே நிலை நீடித்தால் சில தியேட்டர்கள் என்பது பல தியேட்டர்களாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தமிழக அரசும், மத்திய அரசும் சீக்கிரமே தியேட்டர்களைத் திறக்க ஆவண செய்ய வேண்டுமென பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனாலும், எப்போது அனுமதி கிடைக்கும் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
வாழ்க்கையில் சக்தியைக் கொடுப்பவர் ரஜினிகாந்த் - கிரிக்கெட் வீரர் ஸ்ரீநாத்வாழ்க்கையில் சக்தியைக் கொடுப்பவர் ... 28வது நினைவு நாள்: அமைச்சர் பதவியை மறுத்த ப.நீலகண்டன் 28வது நினைவு நாள்: அமைச்சர் பதவியை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

madhavan rajan - trichy,இந்தியா
06 செப், 2020 - 20:26 Report Abuse
madhavan rajan பழையது கழிதலும் புதியன புகுதலும் எப்போதும் நடப்பதுதான். இதிலொன்றும் அதிசயமில்லை. மாற்றமே நிரந்தரம்.
Rate this:
Nalam Virumbi - Chennai,இந்தியா
05 செப், 2020 - 19:46 Report Abuse
Nalam Virumbi சினிமா தொழில் முடங்கினால் நாட்டுக்கு நல்லது.
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
05 செப், 2020 - 18:10 Report Abuse
சாண்டில்யன் கதறக் கதற அடித்துப் பிடுங்கியவை ஆமை புகுந்த வீடாகிப் போனது அய்யகோ
Rate this:
Tamilnesan - Muscat,ஓமன்
05 செப், 2020 - 17:59 Report Abuse
Tamilnesan நல்ல செய்தியை ஏன் சோக செய்தி போல வெளியிட்டீள்ளீர்கள். சினிமாவால், கலாசார சீர்கேடு, கருப்பு பணம், வன்முறை போன்றவைகள் மட்டும் தான் பெருகி உள்ளது. மேலும், தற்கால சினிமாவில் கதை என்பதை காண முடிவதில்லை.
Rate this:
siriyaar - avinashi,இந்தியா
05 செப், 2020 - 14:49 Report Abuse
siriyaar நல்ல காலம் பிறக்குது. இதுபோல் கூத்தாடிகளின் திமிறும் அடக்கப்படவேண்டும்
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in