வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது | என்னை வேவு பார்ப்பவர்களை வீடு புகுந்து அடிப்பேன் : கங்கனா ஆவேசம் | கடும் குளிரில் விஜய் படக்குழுவினர் அவதி: சென்னை திரும்பினார் த்ரிஷா | ஹீரோயின் ஆன யு-டியூப் பிரபலம் | 'லியோ' படத்திற்கு இப்போதே முன்பதிவு ஆரம்பம் | ‛ரைட்டர் பத்மபூஷன்' படம் பாருங்கள் ; சிபாரிசு செய்யும் மகேஷ்பாபு | பதான் இயக்குனருடன் சேர்ந்து பிரபாஸ் - ஹிருத்திக் படத்தை புதுப்பிக்கும் புஷ்பா தயாரிப்பாளர்கள் | தரக்குறைவாக விமர்சித்த நெட்டிசன்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. திருமணத்திற்குப் பிறகும் ஒரு நடிகையால் தொடர்ந்து முன்னணி நாயகியாக இருக்க முடியும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாக இருக்கிறார். தமிழில் தற்போது 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
நேற்று சமந்தா அவருடைய ரசிகர்களின் கேள்விகளுக்கு வீடியோ வாயிலாக பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர், எந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது உங்களுக்குக் கடினமாக இருந்தது என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த சமந்தா, “கவுதம் மேனனை சந்திக்கும் வரை ரொமான்ஸ் கதாபாத்திரத்தில் நடிப்பது கடினம் என நினைத்தேன். நந்தினி ரெட்டியை சந்திக்கும் வரை காமெடி செய்வது கடினம் என எண்ணினேன். ஆனால், இப்போது எதைப் பார்த்தும் தயக்கமில்லை,” என்று பதிலளித்தார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் சமந்தா நாயகியாக நடித்த 'ஏ மாய சேசவே' படத்தின் வெற்றி அவருக்கு தெலுங்கில் சிறப்பான அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்தது. நந்தினி ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த 'ஓ பேபி' படம் சமந்தாவால் காமெடி கதாபாத்திரங்களிலும் ஜொலிக்க முடியும் என்பதை புரிய வைத்தது.