ரஜினி, மம்முட்டி, மோகன்லால், ஆமீர்கான் வீடுகளில் தேசிய கொடி ஏற்றம் | திருமதி.ஹிட்லர் சீரியலின் ஹீரோயின் என்ன செய்கிறார் தெரியுமா? | ஜான்சி ராணி ரோலில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் ரச்சிதா | திவ்யா கிருஷ்ணனுக்கு சல்யூட் அடிக்கும் ரசிகர்கள் | டுவிட்டரில் நுழைந்த விக்ரம் | விஜய் ஆண்டனியின் ஒரு படத்தைக் கூடப் பார்க்காத மிஷ்கின் | சமந்தாவின் ‛யசோதா' ரிலீஸ் எப்போது | லட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு இளையராஜா இசை | அடுத்த ஹனிமூன் டிரிப்பா ; ரசிகர்கள் கேள்வி | தமிழ், தெலுங்கில் ரீமேக்காகும் ஆலியா பட்டின் டார்லிங்ஸ் |
'ராதே ஷ்யாம்' படத்தில் நடிக்கும் 'பாகுபலி' புகழ் பிரபாஸ், அடுத்து நாக் அஸ்வின் படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான ஓரிரு வாரங்களிலேயே பிரபாஸின் அடுத்தப்படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்தது. அது தான் 'ஆதிபுருஷ்'. தெலுங்கு, ஹிந்தியில் பிரம்மாண்டமாக 3டியில் உருவாகும் இப்படம் ராமாயணத்தை தழுவி எடுக்கப்படுகிறது. தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளில் டப்பிங் செய்யப்பட உள்ளது.
இதில் ராமர் வேடத்தில் பிரபாஸ் நடிக்கிறார். ஓம் ராவத் இயக்குகிறார். சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் முக்கியமான ராவணன் வேடத்தில் பிரபல ஹிந்தி நடிகர் நடிப்பார் என ஏற்கனவே தகவல் வெளியானது. குறிப்பாக நடிகர் சைப் அலிகான் இதில் நடிப்பார் என கூறப்பட்டது. அது இப்போது உண்மையாகி விட்டது. ராவணன் வேடத்தில் சைப் அலிகான் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அடுத்து நாயகி சீதா வேடம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது. இதில் கீர்த்தி சுரேஷின் பெயர் முன்னணியில் உள்ளது. இப்படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.