Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கிய ஏ.எம்.ரத்னம்

02 செப், 2020 - 17:03 IST
எழுத்தின் அளவு:
AM-Ratnam-again-Producing-movie

தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் ஒரு காலத்தில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக விளங்கியவர் ஏ.எம்.ரத்னம். இரண்டு மொழிகளிலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தாலும், தெலுங்கை விட தமிழில்தான் அதிகப் படங்களைத் தயாரித்துள்ளார்.

தமிழில் விக்ரம் நடித்து 2008ல் வெளிவந்த 'பீமா' படத்திற்குப் பிறகு ஐந்து வருடங்கள் கழித்து அஜித் நடித்த 'ஆரம்பம்' படத்தையும், அதன்பின் அஜித் நடித்த 'என்னை அறிந்தால், வேதாளம்' ஆகிய படங்களைத் தயாரித்தார்.

தெலுங்கில் 2006ம் ஆண்டு பவன் கல்யாண் நடித்த 'பங்காரம்' படத்திற்குப் பிறகு 11 வருடங்கள் கழித்து 2017ம் ஆண்டு 'ஆக்சிஜன்' படத்தைத் தயாரித்தார். இடையில் பவன் கல்யாண் நடிக்கும் படத்தைத் தயாரிக்கப் போவதாகச் செய்திகள் வெளிவந்தன. ஆனால், அது தள்ளிக் கொண்டே போனது.

இன்று பவன் கல்யாண் பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கிரிஷ் இயக்கத்தில் பவன் கல்யாணின் 27வது படமாக உருவாகப் போகிறது. சரித்திரப்படமாக உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த சில வாரங்களில் ஆரம்பித்து 2021ம் ஆண்டு மத்தியில் வெளியிட உள்ளார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கண்ணாளனே... - 'கவர்' பாடலில் லாவண்யா திரிபாதிகண்ணாளனே... - 'கவர்' பாடலில் லாவண்யா ... பிக்பாஸ் சீசன் 4: இந்த நடிகைக்கு ஒரு கோடி சம்பளமா? பிக்பாஸ் சீசன் 4: இந்த நடிகைக்கு ஒரு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in