தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய சமந்தா | பிரபாஸின் சலார் படத்தில் யஷ் | தோனி தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம் 'எல்.ஜி.எம்' : சென்னையில் ஆரம்பம் | நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் : ஏ.ஆர்.ரஹ்மான் விருப்பம் | சிவகார்த்திகேயனின் மாவீரன் பட கதை மாற்றமா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் | விஜய் சேதுபதி தந்த பர்த்டே சர்ப்ரைஸ் : வாயடைத்து போன பவித்ரா ஜனனி | பாக்கியலெட்சுமி சீரியலில் ராதிகாவாக வனிதாவா? | அசீமின் வெற்றி சமூகத்துக்கு ஆபத்து - பிக்பாஸ் விக்ரமன் பளார் பேட்டி | போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அபிநயா | தமிழ் நடிகர்களுக்கு மரியாதையுடன் அதிக சம்பளம் : சம்பத்ராம் |
பிரபல தெலுங்கு இசை அமைப்பாளர் கீரவாணி. இவர் மரகதமணி என்ற பெயரில் தமிழில் அழகன், நான் பாதி நீ பாதி, பாட்டொன்று கேட்டேன். வானமே எல்லை, ஜாதிமல்லி உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தெலுங்கில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் உறவினரான இவர் பாகுபலி உள்ளிட்ட அவரின் அனைத்து படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
கடந்த மாதம் ராஜமவுலி குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அப்போது கீரவாணி குடும்பத்திற்கும் தொற்று ஏற்பட்டது. அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று குணமாகி உள்ளனர். குணமான பிறகு அனைவரும் பிளாஸ்மா தானம் செய்வோம் என்று ராஜமவுலி அறிவித்தார்.
அதன்படி முதலில் மரகதமணியும் அவரது மகனும் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். கொரோனாவால் இருந்து மீண்டவர்களின் ரத்தத்தில் பிளாஸ்மாவின் அளவு அதிகமாக இருக்கும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம் இருக்கும். இதனை தானமாக பெற்று கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கீரவாணி கூறியதாவது: பிளாஸ்மா தானம் பற்றி எந்த பயமும் கொள்ளத் தேவையில்லை. ரத்த தானம் செய்வது போன்றதுதான். இன்னொருவர் உயிர்காக்க நாம் உதவுவது அற்புதமானது. அந்த வாய்ப்பை எனக்கு அளித்த கடவுளுக்கு நன்றி. என்கிறார்.