Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ரியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த லட்சுமி மஞ்சு

02 செப், 2020 - 09:38 IST
எழுத்தின் அளவு:
Lakshmi-Manchu-supports-Rekha-chakraborty

கடந்த ஜூன் மாதம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இதை தொடர்ந்து, அவரது மரணத்துக்கு காரணம், அவரது காதலி நடிகை ரியா சக்கரபோர்த்தி தான் என சுஷாந்த்தின் தந்தை முதல் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது சிபிஐ இந்த வழக்கு குறித்து விசாரித்து வரும் நிலையில், ரியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சமீபத்தில் ரியாவின் பேட்டியை பார்த்தேன்.. இந்த விஷயத்தில் நான் தலையிட வேண்டுமா, வேண்டாமா என்கிற எண்ணம் கூட எழுந்தது. இங்கே மீடியாக்கள் ஒரு பெண்ணை குறிவைத்து தாக்கிவரும் நிலையில், பலரும் வாய்மூடி மவுனமாக இருக்கின்றனர். உண்மை என்னவென்று எனக்கு தெரியாது.. அதை தெரிந்துகொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன்.. அதேபோல உண்மை ஒருநாள் நேர்மையான முறையில் வெளியே வரும் என்றும் நம்புகிறேன்.

நீதிமன்றத்தின் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.. சுஷாந்த் மரணம் தொடர்பான விசாரணை இப்போது நடைபெற்று வருகிறது. ஆனால் அதுவரை, உண்மை என்னவென்று தெரியாத நிலையில், ஒரு பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் கேவலமாக விமர்சித்து சித்தரவதை செய்யும் போக்கை நிறுத்திக் கொள்ளலாமே.. மீடியாக்களின் சுழலில் சிக்கி. அந்த பெண்ணும் அவரது குடும்பமும் மானசீகமாக அனுபவித்து வரும் வேதனையை என்னால் உணர முடிகிறது.

இதேநிலை எனக்கு வந்திருந்தால், எனது நண்பர்கள், அட்லீஸ்ட் என்னைப்பற்றி நன்கு தெரிந்த ஒருவராவது “தயவுசெய்து அவரை தனியாக இருக்க விடுங்கள்” என எனக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என விரும்பியிருப்பேன்.. அந்தவிதமாக ரியா விஷயத்தில் உண்மை என்னவென்று தெரியும் வரை அவரை தயவு செய்து தனியாக விடுங்கள் என நான் கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ள லட்சுமி மஞ்சு, “சுஷாந்த்துக்கு நீதி வேண்டும்,, ரியாவுக்கும் நீதி வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
இந்தியில் ரீமேக் ஆகும் 'அஞ்சாம் பாதிரா'இந்தியில் ரீமேக் ஆகும் 'அஞ்சாம் ... தனி விமானத்தில் சுஷாந்த் - சாரா அலிகான் : உதவியாளர் வெளியிட்ட தகவல் தனி விமானத்தில் சுஷாந்த் - சாரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

SanDan - NYK,யூ.எஸ்.ஏ
03 செப், 2020 - 05:27 Report Abuse
SanDan Ms Lakshmi Manju, you feel guilty about all the nepotism remarks I s'ppose, being born and brought up in a golden cradle by your father Mohan Babu Have you been following all the facts that are unraveling in SSR's case? How Rhea and her family used and abused him, drugged him and the whole thing seems to be a part of a much bigger and scary drug plot of Bollywood masterminded by the underworld These are facts and Rhea and her family including her druggy father and brother who were not just consumers but suppliers of drugs too - were active participants in the murder plot of SSR Plz stop making your 'sugar and spice and everything nice' kinda statements about the very vile Rhea and Co
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in