Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பேருந்து பயணத்திற்கு வராத மக்கள், தியேட்டர்களுக்கு வருவார்களா ?

01 செப், 2020 - 17:18 IST
எழுத்தின் அளவு:
People-not-interested-to-travel-in-bus,-did-theatres-open-people-will-come?

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் அனைத்துத் தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளது. தியேட்டர்களைத் திறக்க வேண்டும் என நாடு முழுவதும் உள்ள தியேட்டர்காரர்கள், மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் தியேட்டர்களைத் திறக்க அரசு அனுமதிக்க வேண்டுமென தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இதனிடையே, நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் இன்று(செப்.,1) முதல் அமல்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்து இன்று முதல் ஆரம்பமானது.

பொதுவாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய மாநகரப் பேருந்துகளில் எப்போதுமே மக்கள் கூட்டம் முண்டியடிக்கும். அலுவலக நேரங்களில் நிற்கக் கூட இல்லாமல்தான் பேருந்துகள் பயணிக்கும். ஆனால், இன்று மிக மிகக் குறைந்த அளவில் தான் பேருந்துகளில் மக்கள் பயணம் செய்தனர்.

அத்தியாவசியமான பேருந்து பயணத்தையே மக்கள் தவிர்க்கும் மனநிலையில் உள்ள போது, பொழுதுபோக்குக்காக தியேட்டர்களுக்கு வருவதை தவிர்க்க மாட்டார்களா என்ற கேள்வி இன்று எழுந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
திருச்சியில் தேர்வு எழுதிய சாய் பல்லவிதிருச்சியில் தேர்வு எழுதிய சாய் ... புது முயற்சியாக குதிரைவால் புது முயற்சியாக குதிரைவால்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Bhaskaran - Chennai,இந்தியா
02 செப், 2020 - 15:33 Report Abuse
Bhaskaran இனி சினிமா பார்க்காதீர்கள் கோவிலுக்கு போகாதீர்கள் காசை மருத்துவமனைக்கு கொடுங்கன்னு ஜோ அக்கா அறிக்கைவிடப் போறாங்க
Rate this:
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
02 செப், 2020 - 08:19 Report Abuse
VENKATASUBRAMANIAN இப்போது ஜோதிகா சூர்யா கார்த்தி விஜயசேதுபதி மற்றும் சிலர் வாயை திறக்க மாட்டார்கள். இவர்களுக்கு இந்துக்கள் என்றால் இளக்காரம்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
02 செப், 2020 - 08:09 Report Abuse
 Muruga Vel மெரினா பீச்ல திரை கட்டி ஒளி பரப்பலாம்
Rate this:
krish - chennai,இந்தியா
02 செப், 2020 - 08:04 Report Abuse
krish பேருந்தில் நயன், திரிஷா, கீர்த்தி போன்றவரை பார்க்கமுடியுமா?
Rate this:
skanda kumar - bangalore,இந்தியா
02 செப், 2020 - 07:30 Report Abuse
skanda kumar டாஸ்மாக் தமிழன் என்ன நடந்தாலும் குடிப்பதை விடமாட்டான், தியேட்டர் ஹீரோக்களுக்கு பால் ஊற்றுவதை விடமாட்டான். தனது உயிர் போனாலும் இது இரண்டை விடமாட்டான்.
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in